கோவையில் சுமார் 50 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க திட்டம்…!

கோவை மாவட்டத்தில் கல் குவாரிகள் தொடர்பாக கனிம வளம் மற்றும் புவியியல் துறையின் சார்பில் ட்ரோன் சர்வே நடத்தப்பட்டு வருகிறது .

கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்டு வரும் இந்த சர்வே மூலமாக கனிம வள கொள்ளை மற்றும் முறைகேடுகளை கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் 160 கல்குவாரிகள் இருக்கிறது. இதில் 20 கல்குவாரிகளில் ஏற்கனவே கடந்த திமுக ஆட்சி காலத்தில் ட்ரோன் சர்வே ஆய்வு நடத்தப்பட்டது .

தற்போது 140 கல்குவாரிகளில் ஆய்வு நடந்த கொண்டிருக்கிறது. இதில் 130 குவாரிகளில் சர்வே பணி நிறைவடைந்துள்ளது . இன்னும் ஓரிரு நாட்களில் மொத்த சர்வே பணியும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த சர்வே மூலமாக சுமார் 50 கல் குவாரிகளில் விதிமுறை மீறல் அதிகளவு இருப்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. சில குவாரிகளில் பரப்பளவை காட்டிலும் கூடுதலாக கற்கள் வெட்டி தோன்றி எடுக்கப்பட்டிருக்கிறது .‌சில இடங்களில் உரிய பரப்பில் கனிமங்கள் எடுக்கப்படாமல் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது . உரிய ஆழம் மற்றும் பரப்பு கனிமங்களின் அளவுக்கு ஏற்ப ராயல்டி தொகை கட்டப்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கனிம வளம் மற்றும் புவியியல் துறைக்கு உரிய வருவாய் வழங்காமல் மோசடியாக தொடர்ந்து கனிமங்கள் எடுக்கப்படும் குவாரிகள் கண்டறியப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கனிமவளத்துறை உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக முறைகேடு செய்த குவாரிகளுக்கு அபராத தொகை மற்றும் அதிக ஆழம் மற்றும் பரப்பு மோசடி ஈடுபட்ட குவாரிகளை மூடி சீல் வைக்கவும் ஈடுபட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் இந்த அதிரடியான நடவடிக்கை கட்டுமான துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *