கோவையில் மெத்தபெட்டமைன் சப்ளையர் கைது…
கோவை சுண்டக்காமுத்தூர் புட்டுவிக்கி ரோட்டில் கரும்புக்கடை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது உக்கடம் வின்சென்ட் ரோட்டை சேர்ந்த பர்கத் (36), குனியமுத்தூரை சேர்ந்த அப்பாஸ் (46) ஆகியோர் உயர்ரக போதை பொருட்களான மெத்த பெட்டமைன் வைத்திருப்பது தெரியவந்தது.
இவர்கள் இந்த போதை மாத்திரையை ரகசியமாக பலருக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். அதிக நேரம் போதை தரும் இந்த மாத்திரையை இவர்கள் பதுக்கி விற்பனை செய்து வந்தனர். இவர்களிடமிருந்து 3 கிராம் மெத்த பெட்டமைன், 300 கிராம் கஞ்சா 3 போதை ஊசி, கண்ணாடி குடுவை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
