தமிழக தேர்தலில் ‘விசில்’ சுயேச்சை சின்னமாக தேர்தல் கமிஷன் அறிவிப்பு…
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் விசில் சின்னம் சுயேச்சை சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர்களுக்காக 184 சின்னங்கள் தேர்தல் செய்து தேர்தல் கமிஷன் கடந்த 30ம் தேதி அறிவித்தது. இதில் ஏசி, அலமாரி, நடை வண்டி, பலூன், வளையல், பேட், பேட்ஸ்மேன், பேட்டரி டார்ச், நெக்லஸ், பெல்ட், பெஞ்ச், சைக்கிள் பம்பு, பைனாகுலர், பிஸ்கட்,
கரும்பலகை, படகு, பாக்ஸ், ரொட்டி, பிரட் டோஸ்டர், செங்கல், பெட்டி, பிரஷ், பக்கெட், கேக், கால்குலேட்டர், கேமரா, கேன், குடமிளகாய், கார்பெட், கேரம் போர்டு, காளி பிளவர், சிசிடிவி கேமரா, செயின், செக்கு, சப்பாத்தி கட்டை, செருப்பு, செஸ் போர்டு,
சிம்னி, கோட், தென்னை மரம், கம்ப்யூட்டர், மவுஸ், கயிற்று கட்டில், கிரேன், சதுரம், கட்டிங் பிளேயர், டைமண்ட், டீசல் பம்ப், டிஷ் ஆண்டனா, டோலி, காலிங் பெல், டோர் லாக், டிரில் மெசின், டம்புள்ஸ், குப்பை தொட்டி, மின் கம்பம், தபால் கவர், ஸ்விட்ச் போர்டு, புளூட்,
கால்பந்து வீரர், பவுண்டன், பிராக், பிரையிங் பேன், புனல், கேஸ் சிலிண்டர், கேஸ் ஸ்டவ், கிப்ட் பேக், இஞ்சி, கிராம போன், திராட்சை, பச்சை மிளகாய், கை வண்டி, ஹார்மோனியம், ஹெட் போன், ஹெல்மெட், மணல்குடுவை,
எமர்சென் ராடு, அயர்ன் பாக்ஸ், பலா பழம், கெட்டில், கிச்சன் சிங்க், வெண்டை காய், மேலப்டாப், லாக், லெட்டர் பாக்ஸ், லைட்டர், லூடோ, டிபன் பாக்ஸ், தீ பெட்டி, மைக், மிக்சி, நகம் வெட்டி, டை, நூடுல்ஸ் பவுல், சட்டி, பேண்ட், அவரை, பென் டிரைவ்,
பேனா முனை, பேனா ஸ்டாண்ட், பெண்டுலம், அரைக்கும் குடுவை, பெட்ரோல் பம்ப், போன் சார்ஜர், தலையணை, கரண்டி, தட்டு, பிளேட் ஸ்டாண்ட், பிரசர் குக்கர், பன்சிங் மெசின், ரேசர், பிரிட்ஜ், ரிங், ரோடு ரோலர், ரோபோட், ரூம் கூலர், ரப்பர் ஸ்டாம்ப், சேப்டி பின், ரம்பம், பேக்,
தையல் மெசின், கப்பல், ஷூ, ஷட்டர், சிதார், ஸ்கிப்பிங் கயிறு, சிலேடு, சோப் டிஸ், சாக்ஸ், சோபா, ஸ்டாப்லர், ஸ்டெதஸ்கோப், ஸ்டூல், ஸ்டம்பஸ், தூளி, ஸ்விட்ச் போர்டு, சிரிஞ்ச், ரிமோட், டேபிள், டீ பில்டர், டெலிபோன், டிவி, டென்னிஸ் ராக்கெட், சாமியானா, ஈட்டி வீரன்,
மெசின் கலப்பை, சாக்லெட், இடுக்கி, டூத் பிரஷ், டூத் பேஸ்ட், டிரே, முக்கோணம், டிரக், டிரம்பட், டியூப் லைட், டைப் ரைட்டர், டயர், வேக்கம் கிளீனர், வயலின், ஊன்று கோல், சட்டை ஹூக், பர்ஸ், வால்நட்,
தர்பூசணி, வாட்டர் டேங்க், கிணறு, சரக்கு தள்ளு வண்டி, விசில், ஜன்னல், ஊசி நூல் என 184 சின்னங்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது. இதில், சில மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்களாக இருக்கும் ஐஸ்கிரீம், ஆப்பிள், கம்மல், பழக்கூடை போன்றவற்றை ஒதுக்கீடு செய்ய தடை விதித்துள்ளது.
தவெக வின் விசில் பதிவு பெற்ற கட்சியின் சின்னமாக இருக்கிறது. ஆனால் இதனை சுயேச்சை சின்னங்கள் பட்டியலில் சேர்த்து தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த சின்னம் தமிழக வெற்றி கழகத்தினருக்கு மட்டும் ஒதுக்கப்படுமா அல்லது சுயேச்சை வேட்பாளர்களுக்கு சினியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .
விசில் சின்னத்தில் எதாவது தொகுதியில் எந்த வேட்பாளரும் போட்டியிடாமல் இருந்தால் அந்த சின்னத்தை சுயேட்சை கட்சியினர் கேட்டால் அதை ஒதுக்கீடு செய்யலாமா என்பது குறித்தும் தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. விசில் சின்னம் சுயேச்சையாக அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
