தங்கம் விலை ஒரே ஆண்டில் 69 சதவீதம் உயர்வு…!

கோவை மாவட்ட தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை

கோவை மாவட்டத்தில் கடந்த 31.03.2025 அன்று ஒரு கிராம் எடையிலான 24 காரட் தங்கத்தின் விலை ரூ.8,880 என்ற நிலையில் இருந்தது. அதே 24 காரட் தங்கத்தின் விலை 31.03.2026 அன்று ரூ.14,948 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது, ஒரு கிராம் சொக்கத் தங்கத்தின் விலை மொத்தம் ரூ.6,068 உயர்ந்துள்ளது. இது 69% விலை உயர்வைக் குறிக்கிறது.

வருமான வரிச் சட்டத்தின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து தங்க நகை தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளும் வருமான வரித்துறை சட்டத்தின்படி Weighted Average Method (WAM) என்ற முறையின்படி வருமான வரி கணக்கீடு செய்து வருகின்றனர்.

ஆண்டு தோறும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய தயாரிப்பாளர்களாகிய நாங்கள், உலகச் சந்தையில் எதிர்பாராத விதத்தில் சரித்திரம் காணாத அளவிற்கு ஏற்பட்டுள்ள தங்கத்தின் விலை உயர்வால் மிகுந்த வரிச் சுமையை எதிர்கொண்டு வருகிறோம். இது எங்களைப் போன்ற தயாரிப்பாளர்களின் தொழில் வீழ்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் வகையில் தற்போதைய வருமான வரிச் சட்டம் அமைந்துள்ளது.

செய்த வணிகத்திற்கான வருமான வரியை செலுத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இன்றைய நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தின்படி, செய்யாத வணிகத்திற்கு

அதிகளவிலான வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வருமாறு மத்திய நிதி அமைச்சகத்திற்கு பல ஆலோசனைகளை வழங்க உள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *