பெட்ரோல் பங்க் அடாவடி அமைச்சர் சம்பத்குமார் எச்சரிக்கை அறிவிப்பு…
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் அமைச்சர் சம்பத் குமாரின் உறவினர் எனக்கூறி பங்கு ஊழியரிடம் தகராறு செய்து தாக்கினார் இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய ராகவேந்திரா (35), ஜெயச்சந்திரன் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் கமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற அராஜக மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அரசு உரிய சட்டபூர்வ மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கும்.
எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை: பொதுமக்களுக்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் எவருக்கும் இந்த அரசு எவ்விதத்திலும் சாதகமாக இருக்காது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், அராஜகத்தை ஒடுக்குவதிலும் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு எந்தவொரு சூழ்நிலையிலும், எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது.
தவறு செய்தவர் யாராக இருந்தாலும், சட்டம் தன் கடமையை மிகத் தீவிரமாகச் செய்யும்; அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்படுகிறது.
