கோவை GH:காண்டம், கருத் தடை மாத்திரை பாக்கெட்டுகள் காணோம்… !

கோவை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு மற்றும் மகப்பேறு மருத்துவ பிரிவில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இங்கே பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுடன் கணவர், குடும்பத்தினர் பார்வையாளர்களாக தங்கி இருந்து கவனித்து வருகின்றனர். இந்த சிகிச்சை பிரிவுகளில் குழந்தை பேறு தவிர்க்கும் வகையில் காண்டம் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்க அறிவிப்பு வைத்து அங்கே தனி பெட்டி அமைத்தனர்.

அதில் காண்டம் பாக்கெட் குவித்து வைத்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த பெட்டி மட்டும் காலியாக இருக்கிறது. இதில் ஆணுறை பாக்கெட்டுகள் வைக்கப்படவில்லை. சுகாதாரத் துறையிலிருந்து சப்ளையாகும் ஆணுறைகள் கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆண்கள் இலவசமாக ஆணுறைகளை பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் பெண்கள் கர்ப்பமாகாமல் தடுக்க ஈசி பில்ஸ் என்ற கருத்தடை மாத்திரைகள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கும் தனியாக ஒரு பெட்டி வைக்கப்பட்டது. அந்த பெட்டியும் காலியாக கிடைக்கிறது. மாத்திரைகள் எதுவும் வைக்கப்படவில்லை.

இந்த மாத்திரைகளை உறவுக்கு பின்னர் 72 மணி நேரத்தில் பயன்படுத்தினால் கர்ப்பம் தடுக்கப்படும். இந்த மாத்திரைகள் இல்லாததால் பெண்கள் கர்ப்பமாகும். வாய்ப்பு அதிகரித்து உள்ளதாக தெரியவந்துள்ளது. சுகாதாரத்துறையினர் இலவச திட்டங்களை அலட்சியப்படுத்தாமல் மக்களுக்கு கிடைக்கும் வகையில் கவனம் செலுத்தி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *