வியட்நாம் படகு விபத்தில் இறந்த 6 பேரின் சடலம் கோவை வந்தது
வியட்நாம் பூ குவேக் பகுதியில் உள்ள ஒரு தீவில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்தது.
இதில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது. திருச்சி பீமா நகர் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா , திருச்சி திருவானை கோயில் பகுதியை சேர்ந்த பாலாஜி, அன்பு நகரை சேர்ந்த அழகு ராஜன் ஆகியோர் படகு விபத்தில் உயிரிழந்து விட்டனர். இவர்கள் சடலம் விமான மூலமாக இன்று மதியம் கோவை வந்தது.
கோவை விமான நிலையத்தில் கோவை தெற்கு ஆர்டிஓ மாருதி பிரியா தலைமையில் அதிகாரிகள் சடலத்தைப் பெற்று உறவினர்களிடம் ஒப்படைத்தினர். சடலம் ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு இன்னொரு விமானத்தில் தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் ஜெயவேல் திண்டுக்கல் மாவட்டம் பழனி இடும்பன் மலையை சேர்ந்த முருக பிரபு ஆறுமுகம் மற்றும் சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் சுந்தர்ராஜன் ஆகியோரது சடலம் விமான மூலம் கொண்டுவரப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர்.
