கள்ளிப்பால் கொலை காலத்தை மறக்காதீங்க… பெண் குழந்தைகளுக்கு அட்வைஸ்…
கள்ளிப்பால் கொடுத்து கொன்ற காலத்தை மறக்காதீங்க
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் இன்று நடந்தது.
இதில் மாவட்ட சமூக நல அலுவலர் தாரணி, புலிய குளம் அரசு கல்லூரி முதல்வர் அனு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
|மாநகர் பகுதியை சேர்ந்த மாநகராட்சி, அரசு பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகள் பேசும் போது, “ பெண்கள் பின் தங்கியிருந்த காலம் இருந்தது. வீட்டில் ஆண், பெண் குழந்தைகள் இருந்தால் ஆண் குழந்தைகளை தான் பள்ளிக்கு அனுப்புவார்கள்.ஒரு காலத்தில் பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த நிகழ்வுகளும் இருந்தது. இவற்றை எல்லாமல் மறக்க முடியாது.
|இப்போதுள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, படிப்பு நல்ல படியாக கிடைக்கிறது. செல்போன் கிடைக்கிறது என்பதற்காக அதை எப்போதும் வைத்து நேரத்தை வீணாக்க கூடாது. தினமும் 2 மணி நேரம் வீட்டில் கட்டாயம் படிக்க வேண்டும். பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தால் எந்த வேலையும் செய்யாமல் அம்மா அப்பாவிற்கு எந்த உதவியும் செய்யாமல் சும்மா இருக்க கூடாது. பெற்றோர் பேச்சை கேட்க வேண்டும். நன்றாக படித்தால் நல்ல எதிர்காலம் அமையும்.
எனவே படிப்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். சமூக நலத்துறை, பள்ளி நிர்வாகம், போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள், ” என்றனர்.
