சிங்காநல்லூர் மேம்பாலம் பணி அடுத்த மாதம் துவக்கம்…
கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது
. ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது.
இங்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்த ரோட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2022ம் ஆண்டில் 110 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
| ஆனால், ஒன்றிய அரசு இதற்கான நிதியை ஒதுக்கி டெண்டர் விட்டு பணியை துவக்க வில்லை. மேம்பாலம் 2.4 கி.மீ தூரத்திற்கு அமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு துவக்கத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பட்ஜெட் முடிந்தும் நிதி வரவில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து தாமதம் செய்து வந்தது.
3 ஆண்டு தாமதத்திற்கு பின் நிதி ஒதுக்காத நிலையில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தினால் |திட்ட மதிப்பீடும் மாறி விட்டது. தற்போதைய சூழலில் திட்ட மதிப்பீடு 170 கோடி ரூபாய் என |அதிகரிக்கப்பட்டது. கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டது. சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு மேம்பாலம் கட்டும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
|இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் திட்ட பணிகள் துவக்கப்படவுள்ளது. முன்னதாக, மேம்பால பணி நடக்கும் |இடத்தில் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது, போலீசார் மூலமாக மாற்று பாதை திட்டம் செயல்படுத்தப்படும். பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதைகளில் கனரக வாகனங்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் கொண்டு வரப்படவுள்ளது.
நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர் ரோடு, திருச்சி ரோட்டில் செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் விட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பணிகளை 2 ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
