கோவையில் ஆட்சியாளர்கள் பெயரில் வீதிகள்…
கோவை 18ம் நூற்றாண்டில் கோவை பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
1801ம் ஆண்டில் கோவை தனி மாவட்டமாக உருவானது. 1865ம் ஆண்டில் நகர மேம்பாட்டு சட்டத்தின் படி ஆட்சி நிர்வாகம் நடந்தது. 1966ம் ஆண்டில் நகர சபையும், நகராட்சி கமிஷனும் உருவாக்கப்பட்டது. இதற்கு தலைவராக கலெக்டர் இருந்தார். நகர சபையில் 11 உறுப்பினர்கள் இருந்தனர். 1884ம் ஆண்டு முதல் நகர சபைக்கு தேர்தல் நடந்தது.
நகர சபை தலைவர்களும், உறுப்பினர்கள் ஓட்டு தேர்தலில் தேர்வு பெற்றனர். கோவை 115 ஆண்டுக்கு பின்னர், நகர சபையாக இருந்து 1981ம் ஆண்டு மாநகராட்சியாக உயர்ந்தது. ஆனால் 115 ஆண்டு காலம் கோவையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிகாரிகள், தலைவர்களின் பெயர்களில் வீதிகள் உருவானது. 1866ம் ஆண்டு முதல் 1873ம் ஆண்டு வரை கோவையின் முதல் கலெக்டராக பணியாற்றிய மெக்கரிகர் பெயரில் ஆர்.எஸ்.புரத்தில் வீதி உருவானது.
1873ம் ஆண்டு நகர சபை தலைவராக இருந்து ஐ.பாஷ்யகாரலு நாயுடு பெயரில் அதே காலத்தில் வீதி உருவாக்கப்பட்டது. இவரை தொடர்ந்து ஏ. பெரியசாமி முதலியார், பொன்னுரங்க முதலியார், வெங்கிடசாமி நாயுடு, ராமாராவ், திருவேங்கிடசாமி முதலியார், ஆரோக்கியசாமி பிள்ளை, சம்பந்த முதலியார், ராமலிங்கம் செட்டியார், வெங்கடரமண ஐயங்கார், ரத்தினசபாபதி முதலியார், பொன்னைய கவுண்டர், சுப்ரமணியம், கிருஷ்ணசாமி, டாக்டர் நஞ்சப்பா,
பொன்னுசாமி செட்டியார் ஆகியோர் பெயரில் வீதிகள் அமைக்கப்பட்டது. இந்த வீதிகளில் சாதி பெயர் அடையாளம் தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த 1952ம் ஆண்டு வரை ஆட்சியாளர்கள், தலைவர்களின் பெயர்களில் வீதி அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு இந்த நிலை மாறியது. அதற்கு பிறகு கோவையில் பணியாற்றிய அதிகாரிகள், தலைவர்களின் பெயர்களில் வீதி அமைக்கப்படவில்லை. பல பகுதிகளில் வீதிகளில் உள்ள சாதிப் பெயர்கள் அகற்றப்பட்டது ஆனால் இருப்பினும் சில வீதிகளில் சாதிப் பெயர்கள் முக்கிய அடையாளங்களாக இருக்கின்றன.

Best selection of slots I have seen in a while. The graphics are amazing and I won a nice amount last night on ph24jilipark.