கோவையில் வாலிபரை குத்தி கொலை செய்த 8 பேர் கைது

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் நவீன் (24) .

கோவையில் உள்ள தனியார்கல்லூரியில் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு நவீன் வேலை தேடி கோவை வந்தார். அவர் உடையாம்பாளையம் அசோக்நகரில் நண்பர்கள் தங்கி இருக்கும் அறையில் தங்கினார். நேற்று நவீனின் நண்பர்கள் 2 பேர் பைக்கில் வேகமாக சென்றனர்.

இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் அந்த நபர்களை பிடித்து தாக்கினார் இதனை அவர்கள் தனது நண்பர் நவீனிடம் கூறினர்.

இதற்கிடையே நேற்று இரவில் சந்தோசை தங்களது அறைக்கு அழைத்துச்சென்று சரமாரியாக தாக்கினர்.

இந்த விவரங்களை சந்தோஷ், தனது நண்பர்களுக்கு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவரது நண்பர்கள் விக்னேஷ் (26) உள்பட 8 பேர் வந்தனர். பின்னர் 9 பேரும் சேர்ந்து நவீன் மற்றும் அவருடைய நண்பர்களை சரமாறியாக தாக்கினர். அப்போது கத்தியால் நவீனை குத்தினர். இதில் அவருக்கு நெஞ்சில் கத்தி குத்து விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, நவீனின் உடலை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பீளமேடு போலீசார் இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தோஷ், விக்னேஷ் உள்பட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலை மறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *