Gas cylinder புக்கிங் தாமதம் e Kyc இல்லாததால் நெருக்கடி…

கோவை மாவட்டத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன.

பெரும்பாலான இணைப்புகள் பெண்களின் பெயர்களில் இருக்கிறது. காஸ் சிலிண்டர் நுகர்வோர் தங்களது சிலிண்டர் இணைப்பிற்கு ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி என்ற அடையாள சரிபார்ப்பை முடிக்க வேண்டும். வரும் 16ம் தேதிக்குள் இதை செய்யாவிட்டால் மானியம் கிடைப்பதில் தடை ஏற்படும். காஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் நேரடியாக காஸ் சிலிண்டர் வழங்கும் விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆதார், காஸ் சிலிண்டர் புத்தகத்தின் நகல் தரலாம். காஸ் டெலிவரி ஊழியரை அணுகி பயோமெட்ரிக் (கைரேகை) மூலம் உடனடியாக இ-கேஒய்சி செய்யலாம். காஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி அல்லது AadhaarFaceRD என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து விவரம் தரலாம்.

காஸ் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மூலம் இந்த செயலியில் பதிவுகளை செய்யலாம்.முக அங்கீகாரம் பெற முகத்தை ஸ்கேன் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் சில ஏஜென்சிகள் மக்கள் நேரடியாக வந்தால் ஆதாரம் பெற்று கேஒய்சி செய்து தர தாமதம் செய்வதாக புகார் பெறப்பட்டுள்ளது. மக்களில் சிலர் தங்களின் ஆதார் எண், காஸ் சிலிண்டர் இணைப்புடன் இணைக்கப்பட்டதா? என தெரியாமல் இருக்கின்றனர். சிலருக்கு கேஒய்சி இல்லாத காரணத்தினால் காஸ் சிலிண்டர் வினியோகம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். மாவட்ட வழங்கல் பிரிவினர் காஸ் சிலிண்டர் ஆதாரம் இணைப்பிற்கான பணிகளில் அலட்சியம் காட்டும் ஏஜென்சிகள் தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புக்கிங் செய்த காஸ் சிலிண்டர்களை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

One thought on “Gas cylinder புக்கிங் தாமதம் e Kyc இல்லாததால் நெருக்கடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *