வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ… புகையால் மக்கள் பாதிப்பு

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு 630 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இங்கே இன்று காலை திடீரென்று தீபிடித்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அங்கே சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குப்பைகளுடன் சாம்பல் எரியும் பொருட்களை கொண்டு வந்து கொட்டுவதால் இப்படி தீ பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது . புதிய குப்பைகளில் இருந்து மீத்தேன் வாயு உருவாகி அதன் மூலமாகவும் தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளது. இந்த பகுதியை சுற்றியும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில மணி நேரத்தில் இந்த தீயை அணைத்து விடுவோம். தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் தீயை கட்டுப்படுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தீயணைப்பு துறை என தெரிவித்தனர் .

தீ மற்றும் புகை காரணமாக வெள்ளலூர் மேட்டூர் போத்தனூர் உள்ளிட்ட பகுதி புகை மண்டலம் காணப்பட்டது. பொதுமக்கள் ஏற்கனவே இந்த பகுதியில் மூச்சுத்திணறல் சுவாசக் கோளாறு போன்றவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர் .குப்பை கிடங்கு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீ பரவி புகை மண்டலமாக மாறியதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

One thought on “வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ… புகையால் மக்கள் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *