வாளையார் அணையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் வாலிபர்கள்…
தமிழக கேரள எல்லையில் வாளையார் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தற்போது கணிசமான அளவு நீர் தேக்கம் இருக்கிறது.
இங்கே பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அபயகரமான புதை மணல், களிமண் இருப்பதால் இங்கே யாரும் குளிக்க கூடாது. குளித்தால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படும் ஏற்படுத்தும் என கேரளா பொதுப்பணி துறை நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது.
ஆனால் சிலர் இந்த அறிவிப்பை மீறி அணை நீர் தேக்க பகுதியில் குளிக்கிறார்கள். குறிப்பாக மாவுத்தம்பதி பிச்சனூர் பகுதி வழியாக சிலர் அணை பகுதிக்கு சென்று அங்கே குளிப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” நீச்சல் தெரியாதவர்கள் அபாயகரமான தண்ணீரில் இறங்கி குளிக்கிறார்கள் . ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளில் பலர் இங்கே குளித்த போது நீரில் மூழ்கி இறந்து விட்டார்கள்.
எனவே பாதுகாப்பு கருத இங்கே குளிப்பதற்கு நீச்சல் தெரியாத நபர்களை அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளனர். ஆனால் மாவுதம்பதி நவக்கரை பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நாங்கள் பல ஆண்டு காலமாக இந்த அணை நீர் பகுதியை மீன்பிடிப்பதற்கு குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறோம். நீச்சல் தெரிந்த நபர்கள் மட்டுமே இங்கே குளிக்கிறோம். எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

The variety of games here is insane. I spent all weekend exploring different slots and won a decent amount. Definitely give 20jilicomlogin a go!
I had a great run today and won a decent amount. The withdrawal process was surprisingly quick and hassle free. Cheers to pk9999win