தாய் கார் தராததால் மகன் தற்கொலை…!

கோவை வேலாயுதம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தீபா (46). இவர் மகன் ரவிவர்மா(22).

பி.இ படித்து முடித்துள்ள ரவிவர்மா, நேற்று முன் தினம் காலை வெளியே செல்வதற்காக தனது தாயிடம் காரை கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாததாலும், காரை ஓட்ட போதுமான பயிற்சி மற்றும் அனுபவம் இல்லாத காரணத்தினாலும் காரை கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரவிவர்மா,

தனது தாய் வெளியே சென்ற பின்னர் அவருக்கு செல்போனில் வீடியோ கால் செய்து தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள போவதாக கண்ணீருடன் புலம்பியுள்ளார். அவர் வேண்டாம் எனக்கூறியுள்ளார். ஆனால் போன் இணைப்பை துண்டித்த சில நிமிட நேரத்தில் அவர் தூக்கு போட்டு இறந்து விட்டதாக தெரிகிறது.

வீட்டிற்கு வந்த அவர் தாய் மகன் இறந்து விட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல கோவை குனியமுத்தூர் முத்துச்சாமி சேர்வை வீதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (39). கார் மெக்கானிக்கான இவருக்கு சுல்பியாத் (35) என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். அப்துல் ரகுமான் தனது பழைய இருசக்கர வாகனத்திற்கு பதிலாக புதிய வாகனம் வாங்கித் தருமாறு மனைவி சுல்பியாத்திடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். நேற்றுமுன் தினம் இரு சக்கர வாகனம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

சுல்பியாத் தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சென்ற நேரத்தில், வீட்டில் உள்ள குழந்தைக்கான தொட்டில் கட்டும் இரும்பு கம்பியில் சேலையால் அப்துல் ரகுமான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 thoughts on “தாய் கார் தராததால் மகன் தற்கொலை…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *