கோவை ஜி.எச் அவலம்… ஸ்ட்ரக்சர், வீல் சேர் பரிதாபம்

கோவை அரச மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் உள்ளது.

தினமும் பல ஆயிரம் வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள் இந்த மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் சிகிச்சை முறையில் போதுமான மேம்பாடு செய்யப்படவில்லை. மருத்துவமனை வர்கத்தில் ஸ்டிரக்சர், வீல் சேர் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை .

ஸ்டிரக்சரில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் மற்றும் ஆகசிஜன் சிலிண்டர் வைப்பதற்கு இடவசதி செய்யப்படவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை ஒரு வார்டில் இருந்து இன்னொரு வார்டுக்கு அழைத்துச் செல்வதற்கும் ஸ்கேனிங் எடுப்பதற்கு அழைத்து செல்லும்போதும் குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை தனித்தனியாக கையில் பிடித்து தூக்கிச் செல்ல வேண்டி இருக்கிறது.

மேலும் வார்டு பகுதியில் சாய்வு தளம் அமைக்காததால் கரடு முரடான கம்பி மற்றும் குழிகளுக்கு இடையே நோயாளிகளை கஷ்டப்பட்டு தள்ளி செல்ல வேண்டி இருக்கிறது. இந்த நிலையை மாற்றும் வகையில் மருத்துவமனை நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

மேலும் சில இடங்களில் குளுக்கோஸ் பாட்டில், பேண்டேஜ் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஊசிகளை போட்டு விடுகிறார்கள். சாதாரண குப்பையுடன் இந்த பொருட்கள் கிடைக்கிறது. இவற்றினால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும் உணவுப் பொருட்களையும் கண்ட இடங்களில் கொட்டுகிறார்கள்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் பார்வையாளர்கள் தங்குவதற்கு உரிய இட வசதி செய்து தரப்பா வில்லை. பெரும்பாலானவர்கள் அந்தந்த வார்டு முன்பு துணி மற்றும் பாய் விரித்து படுத்து தூங்குகிறார்கள்.

அதே இடத்தில் எச்சில் துப்புவதும் வெத்தலை பாக்கு போட்டு துப்புவதும் நடக்கிறது. இதனால் அந்த வளாகப் பகுதியில் அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதை சரி செய்யும் நடவடிக்கைகளை மருத்துவமனையின் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். பல இடங்களில் தரை தளங்கள் முறையாக அமைக்காமல் விட்டதால் சகதியாக காணப்படுகிறது.

மருத்துவமனையில் அடிப்படை சுகாதாரம் மற்றும் பராமரிப்பு பணிகள் மந்தகதியில் இருக்கிறது. பல இடங்களில் குடி நீர் குழாயில் குடிநீர் வருவதில்லை. பொதுமக்கள் பலர் வெளியே சென்று குடிநீர் வாங்கி வர வேண்டி இருக்கிறது. மருத்துவமனை நிர்வாகம் அடிப்படை வசதிகளுக்கான பணிகளை விரைவாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

One thought on “கோவை ஜி.எச் அவலம்… ஸ்ட்ரக்சர், வீல் சேர் பரிதாபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *