Covai metro news பாலோ அப்…. குப்பையில் கிடந்த சிற்ப தூண்கள் மீட்பு
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் கார் நிறுத்தும் இடத்தில் இரண்டு சிற்பத்துண்கள் வைக்கப்பட்டுள்ளது.
எந்த பராமரிப்பும் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக இந்த சிற்பத்ததூண்கள் இங்கே காட்சி பொருளாக இருக்கிறது. கோயிலில் வைக்கப்பட வேண்டிய சிலைகள் உள்ள சிற்ப தூண்கள் இங்கே வந்தது எப்படி என யாருக்கும் தெரியவில்லை. இவற்றை இந்து சமய அறநிலையத் துறையினரும் கொண்டு செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இதே போல் இதே வளாகத்தில் இரண்டு சிற்ப தூண்கள் குப்பைகளுக்கு இடையே தூக்கி வீசப்பட்டுள்ளது. இதிலும் சிலைகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிலைகள் எப்போது யாரால் கொண்டு வந்து வைக்கப்பட்டது என தெரியவில்லை. கோனியம்மன் கோயிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்த 24ம் தேதி covai metro news website மற்றும் இன்ஸ்டாகிராமில் முதன் முதலில் விரிவான செய்தி வெளியானது. இதை தொடர்ந்து கோவை மாவட்ட தொல்லியல் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை பாரம்பரிய பிரிவு பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகளிடம் தொல்லியல் துறையினர் விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் கேட்ட போது இந்த சிற்ப தூண்கள் தொடர்பாக யாரும் கேள்வி கேட்கவில்லை. எங்கே ஒப்படைப்பது என தெரியாமல் நாங்கள் இங்கே வைத்திருக்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் இங்கே கோயில், பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே இருந்தது. சிலைகள் தூண்கள் அதிகளவு இங்கே இருந்தது.
இவற்றில் இவை விடுபட்டிருக்கலாம் என தெரிவித்தனர். தொல்லியல் துறையினர் பார்க்கிங் பகுதி தூண்களில் உள்ள சிற்பங்கள் தொடர்பாக பிரதி (படி) எடுத்து அதன் விவரங்கள் ஆய்வு செய்தனர். இதில் விஷ்ணு மற்றும் ஆஞ்சநேயர் உருவங்கள். முகப்பு பகுதியில் உள்ள சிற்பங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது எந்த கோயிலுக்கு சொந்தமானது என உறுதி செய்ய முடியவில்லை. இந்து சமய அறநிலையத்துறையினரிடமும் இந்த சிற்ப தூண்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இதை இந்து சமய அறநிலையத்துறையினர் கண்டு கொள்ளாமல் விட்டது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. மேலும் குப்பையில் வீசப்பட்ட சிற்ப தூண்கள் சீரமைப்புக்காக எடுக்கப்படவுள்ளது.
இவற்றை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பார்க்கிங் பகுதியில் சிற்ப தூண்களை பில்லர்கள் போல் அமைத்துள்ளனர். இவற்றை அகற்ற முடியாத நிலையிருக்கிறது. இதற்கான மாற்று திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் யோசித்து வருகின்றனர். கோயில் சிற்ப தூண்கள் தினகரன் செய்திக்கு பின்னர் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Really impressed with the game variety here. I had a great run last weekend and the support team was super helpful. Highly recommend 888win58com to anyone looking for action.