கோவையில் உதவும் போது உயிர் விட்ட யாசகர்…
கோவை அரசு மருத்துவமனை முன்பு வியாபார கடைகள் இருக்கிறது. இந்த கடையில் பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் சிலர் யாசகம் கேட்டு வருகிறார்கள்.
குறிப்பாக நடக்க முடியாதவர்கள், வயதானவர்கள் சிலர் இங்கே வரும் மக்களிடம் யாசகம் கேட்கிறார்கள். சிலர் உடல் மற்றும் மன குறைபாடுகளுடன் பிச்சை கேட்பதாக தெரிகிறது. அவர்களை கடைக்காரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் விரட்டி தாக்குவது அவ்வப்போது நடக்கிறது.
சமீபத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த பிச்சைக்காரர் வாசுதேவன் (62) என்பவர் கால் நடக்க முடியாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் கட்டு போட்டு பிளாட்பாரத்தில் தங்கியிருந்தார். அங்கே வரும் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு வந்தார். இதை பார்த்த கடைக்காரர் ஒருவர் அவரை கடைப்பகுதிக்கு வர வேண்டாம் என சொல்லி அட்டைப்பெட்டியை வைத்து தடுத்து அவரை காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினார் .
தண்ணீர் எடுத்து ஊற்றி டார்ச்சர் செய்தார். இது தொடர்பான வீடியோ பதிவு வைரலான நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடல் குறைபாடுடன் யாசகம் கேட்கிறார்கள் அவர்களை தாக்குவது சரியல்ல. மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் இதுபோல் அப்பாவிகளை தாக்குவது சரியல்ல. தாக்குதல் நடத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். யாசகம் கேட்பவர்களை தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடைக்காரர்கள் சிலர் அவல கோலத்தில் பிச்சை கேட்பவர்களால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் திரும்பி போகிறார்கள் எனக்கூறி,
வடமாநில நபர் ஒருவருக்கு பணம் தந்து பிச்சைக்காரர் வாசுதேவனை அங்கேயிருந்து வேறு இடத்திற்கு தரதரவென இழுத்து செல்ல வைத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் உடல் மன நிலை பாதிக்கப்பட்டவரை, பிச்சை எடுப்பவரை தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்டு நபரை மீட்டு உரிய உதவியை வழங்க வேண்டும்.
அவருக்கு சிகிச்சை அளித்து மறு வாழ்வு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து யாமி பவுண்டேசன் அமைப்பினர் யாசகர் வாசுதேவனை மீட்டு சிவானந்தா காலனியில் உள்ள காப்பகத்திற்கு நேற்று வாகனத்தில் அழைத்து சென்றனர்.
ஏற்கனவே நோய், உடல் நல பாதிப்பில் இருந்த அவர் வாகனத்தில் பரிதாபமாக இறந்தார். அவர் வாகனத்தில் தண்ணீர் குடித்த பின்னர் உயிரை விடும் வீடியோ பதிவும் வெளியாகியது. இதுவும் மக்கள் மத்தியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியது. காப்பகத்தினர் தாத்தா தாத்தா என அழைத்து அவரிடம் பாசம் காட்டின நிலையில் அவர் கண்கள் திறந்து நிலையில் உயிர்விட்ட வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தனியார் அமைப்பினர் சடலத்திற்கு உரிய சடங்கு செய்து தகனம் செய்தனர்.
