2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தருவார்களா…?!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடக்கிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தவெக அரசு மகளிருக்கு உரிமை தொகையாக 2500 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் பிரதானமாக அறிவித்தது. மகளிர் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு உரிமை தொகையாக 2500 ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வாரந்தோறும் உரிமை தொகை கேட்டு 500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் விண்ணப்ப மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் சமூக பாதுகாப்பு இட்ட பிரிவினர் இந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

உரிமை தொகைக்கு மனுக்கள் வாங்கலாமா? வேண்டாமா? என்று கூட சொல்லவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் பெறப்பட்ட அதே நடைமுறையில் தற்போதும் மனுக்கள் வாங்கி வருகிறோம். ஆனால் இதை என்ன செய்வது என்று எங்களுக்கும் தெரியவில்லை என தெரிவித்தனர். இதனால், பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து ஏமாற்றமான சூழல் இருக்கிறது.

தவெக அரசு ஆட்சிக்கு வந்த 100 நாட்களில், 12 குறை தீர்ப்பு முகாம்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் உரிமை தொகை மனுக்கள் பெறப்பட்டது. இதுதவிர, தாலுகா அளவில் நடந்த முகாம்களில் ஜமாபந்தி போன்றவற்றிலும் பல ஆயிரம் விண்ணப்பங்கள், முதல்வரின் தனி பிரிவிற்கும் மனுக்கள் குவிந்து வருகிறது.

இதை கவனத்தில் எடுக்காமல், 15 நாட்களுக்கு பதில் தர வேண்டும் என விதிகளை மீறி அதிகாரிகள், அலுவலர்கள் அப்படியே விண்ணப்பங்களை கிடப்பில் போட்டிருக்கிறார்கள். மாவட்ட அளவில் 100 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் கிடப்பில் இருக்கிறது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் தேர்தல் காலத்தில் பெட்டியில் போடப்பட்ட 2 ஆயிரம் மகளிர் உரிமை விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படவில்லை.

மாவட்ட அளவில் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் என்ன ஆனது என யாருக்கும் தெரியவில்லை.

இதுகுறித்து குறைதீர்ப்பு முகாமிற்கு வந்த மகளிர் கூறுகையில், நாங்கள் தரும் விண்ணப்பங்களுக்கு ரசீது வாங்கி வைத்திருக்கிறோம். இது ஒரு மாதத்தில் காலத்திற்குள் காலாவதி ஆகி விடும். மறுபடியும் நாங்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இப்படி எவ்வளவு காலம் நாங்கள் செய்வது. இதற்கு அரசு தரப்பில் இருந்து பதில் வந்தால் பரவாயில்லை. நாங்கள் எதிர்பார்த்து தொடர்ந்து ஏமாற்றத்தில் இருக்கிறோம்” என்றனர்.

One thought on “2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தருவார்களா…?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *