நிலுவை வாட் வரி நோட்டீஸ் ; தொழில் துறையினர் அதிர்ச்சி

நிலுவை வாட் வரி மற்றும் ஆவணங்கள் கேட்டு, குறுந்தொழில் முனைவோருக்கு நோட்டீஸ் அனுப்பி வருவதால் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

கோவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) வணிகவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் நிலுவை தொகையை செலுத்தாதது மற்றும் வரி கணக்கு தாக்கல் செய்வதில் ஏற்பட்ட காலதாமதம் தொடர்பாக உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலுவை வாட் வரியுடன் அபராத தொகையையும் செலுத்த வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர் இதனால் குறுந்தொழில் நிறுவனங்கள் கடும் நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோவையை சேர்ந்த சிறிய அளவிலான கம்ப்ரசர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு கடந்த 2017-13-ம் ஆண்டுக்கான வரி கணக்கு தாக்கல் காலதாமதம் தொடர்பாக தற்போது நோட்டீஸ் அணுப்பப்பட்டுள்ளது.

இதில் செலுத்த வேண்டிய தொகை வட்சக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து செலுத்துவது?” என அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதேபோல் கோவையில் பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ்களுக்கு எதிராக பிரதிநிதிகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மூலம் போராடி வருகின்றன.

இதுகுறித்து கோவை தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக வணிகவரித்துறை சார்பில் வாட் வரி தொடர்பான நோட்டீஸ்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக 348 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும், சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தைய வாட் வரி நிலுவை மற்றும் கணக்கு தாக்கல் தாமதம் தொடர்பாகவும் தற்போது நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட ஆவணங்களை தொழில் நிறுவனங்கள் சமர்ப்பித்த பின்னரும், உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி வழக்குகளை முடித்து வைக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதுதொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் நிதி நெருக்கடிகளை கருத்தில் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *