காட்டு பன்றியா சாக்கடை பன்றியா… வனத்துறையினர் குழப்பம்
கோவை மாவட்டத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் காட்டுப்பன்றிகள், உண்மையில் காட்டுப்பன்றிகளா அல்லது ஊருக்குள் சுற்றும் சாக்கடை பன்றிகளா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை தொடர்ந்து, அரசு உத்தரவின்படி குறிப்பிட்ட வனக்கோட்டங்களில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொல்லை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை வனக்கோட்டத்தில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சுமார் 60 காட்டுப்பன்றிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், காட்டுப்பன்றிகளால் ஏற்படும். பயிர் சேதமும், பொதுமக்களுக்கு ஏற்படும் தொல்லையும் கட்டுக்குள் வரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
வனத்துறை பரிந்துரைக்கும் விரட்டும் திரவங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்றும், காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வதே நடைமுறையில் பயனளிக்கும் ஒரே தீர்வு என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர் மேலும், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது
அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். இவ்வாறு குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் காட்டுப்பன்றிகளுக்கும், சாக்கடையில் சுற்றும் பன்றிகளுக்கும் இடையிலான பெரிய வித்தியாசம் எதுவும் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது.
இந்த பன்றிகள் கலப்பினமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காட்டு பன்றிகள் ஊருக்குள் சுற்றி ஊர் பன்றிகள் போலவே காட்சியளிக்கின்றன. இது தொடர்பாக கடந்த காலங்களில் வனத்துறையினர் எந்த ஆய்வும் செய்யாமல் விட்டுவிட்டனர். தற்போது இது தொடர்பான ஆய்வு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனை உறுதி செய்வதற்காக சுட்டுக்கொல்லப்பட்ட பன்றிகளின் உடல் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். டிஎன்ஏ பரிசோதனையில், தற்போது தொல்லை அளிப்பது காட்டுப்பன்றிகள் இல்லை என உறுதி செய்யப்பட்டால், அவற்றை கட்டுப்படுத்த விவசாயிகளும் பொதுமக்களும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இருக்காது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Great options for cash-ins and withdrawals. It is very convenient for local players and the support team is helpful. Visit phnustargcash