நெல்லை மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம், போத்தனூர்-சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு RG ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போத்தனூர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06078) செப்டம்பர் 4 ம் தேதி முதல் 27-ம்- வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் செப்டம்பர் 4 முதல் 27 ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் போத்தனூர் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06027) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூர் நிலையத்துக்கு வந்தடையும்.
இந்த ரயிலானது இருமார்க்கத்திலும் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும், செப்டம்பர் 5-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் நிலையத்தை வந்தடையும்.
மறுமார்க்கமாக செப்டம்பர் 7-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை திங்கள்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 745
மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06029) | மறுநாள் காலை 8.05 மணிக்கு திருநெல்வேலி நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது இருமார்கத்திலும் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக் குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
