நடுரோட்டில் ஆபத்தான மின்கம்பங்கள்

கோவை சுங்கம் பெரியார் நகர் பகுதியில் நடுரோட்டில் மின் துன்பங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் சில மின்கம்பங்கள் பராமரிப்பு இல்லாமல் சாய்ந்து விழும் நிலைமையில் உள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும். இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து மின்வாரியத்தினர் அங்கே மின் கம்பங்களுக்கு கான்கிரீட் தளம் அமைத்தனர். ஆனால் இந்த பணியை அவர்கள் நிறைவாக செய்யாமல் அறைகுறையாக பெயரளவுக்கு செய்துள்ளனர்.

மின்கம்பங்களை மிகவும் உறுதியாக செய்யாமல் தரைதளத்தில் மேலோட்டமாக கான்கிரீட் தளம் அமைத்திருப்பதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இடத்தில் வெறும் பிளாஸ்டிக் தடுப்புகள் வைத்து அதில் கான்கிரீட் கலவை எதுவும் போடாமல் விட்டு சென்றுள்ளனர். இதற்கு அந்த மின் கம்பங்கள் உறுதியாக நிற்பது சந்தேகமாக இருக்கிறது.

பொதுமக்கள் கூறுகையில், “ரோட்டின் மையப்பகுதியில் மின் கம்பங்கள் இருக்கிறது. இவற்றையே அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மின்கம்பங்கள் மீது மோதும் நிலைமை இருக்கிறது. மின்வாரியத்தினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ” என தெரிவித்தனர்.

படம் உள்ளது.

One thought on “நடுரோட்டில் ஆபத்தான மின்கம்பங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *