கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி…
கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (40), ஆட்டோ ஓட்டுநர்.
இவர், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு இன்று காலை வந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் தான் மறைத்து எடுத்து வந்து இருந்த மண்ணெண்ணெயை திடீரென தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர். பெரியசாமி, தன்னை பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட சிலர் சேர்ந்து அடித்து துன்புறுத்தினார்கள். இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மாநில மனித உரிமை ஆணையம் வரை சென்று முறையிட்டும் எனக்கு இதுவரை சரியான பதிலும் நியாயமும் கிடைக்கவில்லை. எனக்கு நியாயம் வழங்காவிட்டால் பரவாயில்லை, என்னை நேராக தூக்கு மேடையிலாவது ஏற்றுங்கள் என கூறி தீக்குளிக்க முயன்றார்.
அவரை மீட்ட போலீசார் உங்கள் புகாரை மனுவாக கொடுங்கள், கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சமாதானப்படுத்தி, விசாரணைக்காக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Super easy to access and the games load instantly. I spend most of my free time here and it never gets boring. Check out 365jililogin