கோவை போலீசார் நைட் ரவுண்ட்ஸ், புட் பேட்ரோல் தீவிரம்…!

கோவை நகரில் சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக, போதை பொருட்கள் கடத்தல், குற்ற செயல்கள் அதிகமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் இரவு காவல் பணியில் அலட்சியமாக இருப்பதால் அசம்பாவிதம், மோதல் தடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.

இதை தொடர்ந்து மாநகரில் இரவு ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஜி.எச். பிரதான ரோடு குறிப்பாக அவினாசி ரோடு பகுதிகளில் போலீசார் இரவில் அடிக்கடி சோதனை செய்கின்றனர். சந்தேக நபர்கள் வீடியோ பதிவு செய்யப்படுகிறார்கள். விசாரணைக்கு உட்படுத்தப்படும் வாகனங்களையும் போலீசார் வீடியோ பதிவு செய்கிறார்கள்,

கடந்த காலங்களில் செயல்படாமல் சும்மா: இடந்த புறக்காவல் நிலையங்கள் பெயிண்ட் அடித்து சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. குறிப்பாக சென்சிடிவ் ஏரியாக்களான உக்கடம், கோட்டை மேடு, கரும்புக்கடை, போத்தனூர், செல்வபுரம், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் உள்ள புறக்காவல் நிலையங்களை தயார் செய்து விட்டனர்.

சந்தேக நபர்கள் விசாரணை, வாகன சோதனை, ரோந்து பணி நடக்கிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் புட் பேட்ரோல் என நடந்து போய் கண்காணிக்கும் திட்டம் கடந்த சில மாதங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் சகஜமாக பேசி தகவல் வாங்க இந்த நடைபயண கண்காணிப்பு பணிகள் மாலை நேரங்களில் நடக்கிறது.

தினமும் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணி மற்றும் ஏரியா கண்காணிப்பு பணியை நைட் ரவுண்ட்ஸ் உதவி கமிஷனர்கள் கண்காணிக்கிறார்கள். தொடர்ந்து பணி நடந்து வந்த போதிலும் குற்றவாளிகள் செக்கிங் பணியில் சிக்கவில்லை. குறிப்பாக ரெகுலர் செக்கிங் ஏரியாக்கள், பிரதான ரோடுகளை மட்டுமே போலீசார் குறி வைத்து சோதனை செய்வது பலருக்கும் வெளிப்படையாக தெரிகிறது.

இதனால் குற்ற பின்னணி நபர்கள் குறுக்கு சந்து வீதிகளை பயன்படுத்தி செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் மெயின் ரோடு செக்கிங் திட்டத்தை கைவிடவில்லை. மாநகரில் குற்ற சம்பவ ஏரியாக்களை கண்காணிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நேரங்களில், இரவு விற்பனை அதிகமாக இருக்கும் நேரங்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

One thought on “கோவை போலீசார் நைட் ரவுண்ட்ஸ், புட் பேட்ரோல் தீவிரம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *