போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு…! வட மாநில வாலிபர்கள் ரகளை
மது போதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டத்தில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்து தங்கி, குறுந்தொழில் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள பல நிறுவனங்களில் அவர்களுக்கு சனிக்கிழமைகளில் வார சம்பளம் வழங்கப்படுகிறது.
சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் சில வடமாநில தொழிலாளர்கள், டாஸ்மாக் கடைகளுக்கு சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபடுவது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காளப்பட்டி பகுதி டாஸ்மாக் கடை ஒன்றில் மது அருந்திய வடமாநில தொழிலாளர்கள் சிலர், மதுபோதையில் நேரு நகரில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை இடைமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், நடுரோட்டில் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ரகளையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

I was struggling to get back into my account but this alternative link saved the day. Super easy to navigate. Check out zuma78linkalternatif if you are having access issues.
Been playing here for a week now and the payouts are legit. It is refreshing to find a platform that is this transparent. Love the vibe at br3333bet.
The Gcash integration is seamless and the login is very secure. It makes managing my funds and playing so much easier. Cheers to nustaronlinegcashlogin for the great service.