கோவை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்க்க ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் 1-1-2027ம் தேதியை தகுதி நாளாக கொண்டு போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் தொடர்பான அட்டவணை வெளியாகியுள்ளது.

வாக்கு சாவடி திருத்தம், மறு சீரமைப்பு 2-22 2026ம் தேதிக்குள், வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 12ம் தேதிக்குள் ஏற்பு, மறுப்புரைகள் விண்ணப்ப காலம் வரும் டிசம்பர் 28ம் தேதிக்குள் முடிக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி வெளியாகும்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2027ன் போது ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் அளித்திட அனுமதிக்கப்பட்டது. வரும் 12.11.2026ம் தேதி முதல் 11.12.2026ம் தேதி வரை உள்ள காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள். இடமாற்றம் செய்யவோ விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6 7 அல்லது 8 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து அளிக்கலாம்.

படிவம் – 6 என்பது புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பப் படிவம், படிவம் 6A வெளிநாடு வாழ் வாக்காளர் ஒருவர் பெயரை வாக்காளர் பட்டியவில் சேர்ப்பதற்கான விண்ணப்பம். படிவம் 68 வாக்காளர் பெயருடன் ஆதார் எண்ணினை இணைப்பதற்கான படிவம்

படிவம் – 7 என்பது ஒரு நபரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆட்சேபணை செய்வதற்கான வாக்காளர் விண்ணப்பப் படிவம் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்கம் செய்வதற்கான விண்ணப்பப் படிவம்.

படிவம் D என்பது குடியிருப்பை ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாவோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே மாற்றினாலோ நடப்பு வாக்காளர் பட்டியலிலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்காகவோ

மாற்று வாக்களர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான அல்லது மாற்றுத் திறனாளிகளை குறியீடு செய்வதற்கான விண்ணப்பப் படிவம், பொதுமக்கள் தங்களது ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை மேற்காணும் விண்ணப்ப படிவங்களைப் பயன்படுத்தி, மேலே அட்டவணையில் தெரிவிக்கப்ட்ட காலகட்டத்தில் அளித்திடலாம்.

அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அளிக்கலாம். சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். தேவைப்படும் விண்ணப்பப் படிவங்கள் அனைத்து அலுவலகங்களிலும் போதுமான அளவில் இருப்பில் உள்ளன.

வாக்காளர் பட்டியல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு https://voters.eci.gov.in ஆகிய இணையதளம் மற்றும் “ECINET” கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். எனவே, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த நடவடிக்கையினை மேற்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2 thoughts on “கோவை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்க்க ஏற்பாடு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *