K. V

கோவை மாவட்டத்தில் குத்தகைக்கு விட்டு மீட்கப்படாத அரசு நிலங்கள்…!

பொதுப்பணித்துறை நிலத்தில் குத்தகையில் இயங்கும் உக்கடம் பஸ் டிப்போ.. கோவை மாவட்டத்தில் அரசு நிலங்கள் தனியாருக்கு குத்தகை அடிப்படையில் கடந்த காலங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சில ஆண்டு கால அவகாசம் வழங்கியும், சில ஆண்டுகள் கால நீட்டிப்பு வழங்கியும் நிலங்கள் ஒப்படை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலங்களை மீட்க, அரசு பணிகளுக்கு பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படாமல் தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. மாவட்ட அளவில் குத்தகைக்கு பல கோடி ரூபாய்…

Read More

அடையாளமின்றி அழிந்து போன நொய்யல் ஆறு…!

உக்கடம் ஆத்துப்பாலம் பகுதி நொய்யல் ஆறு… கோவை மாவட்டத்தில் துவங்கும் நொய்யல் ஆறு 180.50 கி.மீ தூரம் பாய்ந்து காவிரியில் கலக்கிறது. 28 குளங்கள், 23 அணைக்கட்டு, 2 நீர் தேக்கம், 18,386 ஏக்கர் பாசன பரப்புக்கு நேரடி நீர் சப்ளை மற்றும் 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு மறைமுக பாசன உதவிக்கு இந்த ஆறு உதவியாக இருக்கிறது. நகரில் உள்ள 8 குளங்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஸ்மார்ட் சிட்டி இட்டத்தில் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 200910…

Read More

கோவையில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் செட்டிபாளையம் பகுதியில் பழைய பிளாஸ்டிக் மற்றும் ஸ்கிராப் குடோன் உள்ளது . இன்று இரவு இந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு பிளாஸ்டிக் பாத்திரங்கள் பழைய இரும்பு மற்றும் தகர பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர் ….

Read More

கோவை சிறுமுகையில் ஊருக்குள் புகுந்த விளையாட்டு காட்டிய குட்டி யானை…!

கோவை சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் பகுதியில் இன்று காலை குட்டி யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. பிறந்து சில மாதங்களே ஆன இந்த குட்டி யானை தாயை பிரிந்து வழி தெரியாமல் ஊருக்குள் வந்து விட்டதாக தெரிகிறது.ஊருக்குள் வந்த இந்த குட்டி ஜாலியாக ரோட்டில் சென்ற பொது மக்களிடம் விளையாடியபடி சுற்றிக் கொண்டிருந்தது . மேலும் வாகனங்களின் பின்னால் ஓடி சென்று விளையாட்டு காட்டியது. இதை பார்த்த பொதுமக்கள் குட்டியானையுடன் நின்று போட்டோ எடுத்து வீடியோ…

Read More

கோவை ஓட்டு எண்ணிக்கை மையம் செல்ல பாஸ்…

கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வரும் மே 4ம் தேதி ஒட்டு எண்ணிக்கை நடத்தப்படும். இதில், ஓட்டு எண்ணிக்கை பணியில் ஒரு தொகுதிக்கு 120 பேர் வீதம் 10 சட்டமன்ற தொகுதிக்கு 1200 பேர் பணியில் இருப்பார்கள். இது தவிர போலீசார் 2 ஆயிரம் பேர் பணியில் இருப்பார்கள். மாவட்ட அளவில் தேர்தலில் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 14 முதல் 22 சுற்றுக்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படுவதால், 14 முதல் 22 டேபிள்…

Read More

கோவை மாவட்டத்தில் 14 முதல் 22 ரவுண்ட்ஸ் ஓட்டு எண்ணிக்கை…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3540 ஓட்டு சாவடிகளில் வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 15,223 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு…

Read More

நடிகர் விஜய் மீது நடவடிக்கை கோவை போலீசில் புகார்…!

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளரான கோவைகணபதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (35) என்பவர் தனது கட்சி நிர்வாகிகள் சிலருடன் இன்று புகார் மனு அளித்தார். இதில் அவர் ,” எனக்கு ஐந்து வயதில் மகன் இருக்கிறார்.நடிகர் விஜய் ரசிகரான அவர் இந்த தேர்தலில் அவருக்கு விசில் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என எனக்கு நிபந்தனை விதித்தார். அவர் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டால் நான் சாப்பிட மாட்டேன் தூங்க…

Read More

கோவை சிறுவாணி அணையில் கடும் வறட்சி. பாதாளத்தில் நீர்மட்டம்…!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது . அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 50 அடி. கடந்த சில மாதம் முன்பு உச்சத்தில் இருந்த அணையின் நீர்மட்டம் இப்போது13.30 அடியாக குறைந்துவிட்டது. அதாவது கடல் மட்ட உயர கணக்கின்படி 867.48 மீட்டர் (slm) ஆக இருக்கிறது. இன்னும் 863.40 மீட்டர் வரை குடிநீர் பெற முடியும். தற்போது தினமும் 4.6 கோடி லிட்டர் குடிநீர் தினமும் பெறப்படுகிறது. அணையில்…

Read More

கோவையில் போலி வேட்பாளர்களால் பிரச்சனை

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவர் ராகுல் காந்தி. இவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் நான் போட்டியிட்ட கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் சில சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் தேர்தல் களத்தில் திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு உதவும் வகையில் செயல்பட்டார்கள். அடையாள அட்டை மற்றும் பூத் ஏஜென்ட் பாஸ் தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சியினருக்கு பெற்றுத் தரும்…

Read More

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 84.39 சதவீத வாக்கு பதிவு…!

கோவை மாவட்டத்தில் 27.44 வட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் இன்று ஒட்டு பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 6323 ஓட்டு பதிவு மெசின்கள், 4272 கன்ட்ரோல் யூனிட்டுகள், 4623 சின்னம் காட்டும் மெசின்கள் என 15,223 மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த மெசின்கள் அனைத்தும் 330 வாகனங்களில் 3540 ஓட்டு சாவடிகளுக்கு வாகனங்களின் மூலமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு, துணை ராணுவ படை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. மிசின்களுடன் 43 வகையான பொருட்களும்…

Read More