கோவையில் அரசு பஸ் ஒட்டிய டிரைவருக்கு ஹார்ட் அட்டாக்கில் சாவு… பஸ் மோதி ஆட்டோ டிரைவர் சாவு
கோவையில் ஓடும் பஸ்சில் மாரடைப்பால் பஸ் டிரைவர் பலியானார். அந்த பஸ் தாறுமாறாக ஓடி ஆட்டோ மீது மோதியதில் அதன் டிரைவரும் உயிரிழந்தார்.
கோவை பாலத்துறையில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று அரசு பஸ் ஒன்று உக்கடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை சிங்காநல்லூரை சேர்ந்த டிரைவர் மார்ட்டின் (54) என்பவர் ஓட்டினார். பஸ், குனியமுத்தூர் சுண்ணாம்பு கால்வாய் அருகே வந்து கொண்டிருந்தபோது, மார்ட்டினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
வலியால் துடித்த அவர் சிறிது நேரத்தில் இருக்கையிலேயே மயங்கி சரிந்தார். இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், தாறுமாறாக ஓடி அங்கு அடுத்தடுத்து நின்றிருந்த மற்றும் சென்று கொண்டிருந்த கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் முன்னால் சென்று கொண்டு இருந்த ஆட்டோ முழுமையாக நொறுங்கியது.
மோதிய வேகத்தில் ஆட்டோ ஓட்டி வந்த குனியமுத்தூர் அன்னம்மநாயக்கர் வீதியை சேர்ந்த டிரைவர் நூர் முகமது (51) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் இந்த விபத்தைக் கண்டு அலறியடித்து ஓடினர். உடனே பஸ் கண்டக்டர் பரமேஸ்வரன் டிரைவர் இருக்கைக்கு சென்று பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்தினார்.
இதற்கிடையே, பஸ் மோதியதில் பைக்கில் வந்த காளவாய் பகுதியை சேர்ந்த அப்பாஸ் (46) என்பவர் படுகாயம் அடைந்தார். பஸ் தாறுமாறாக ஓடியதில் பஸ்சில் பயணித்த கருமத்தம்பட்டியை சேர்ந்த நாகேஸ்வரி (51) என்பவர் பயந்து பஸ்சில் இருந்து குதித்தார். இதில், அவரும் காயம் அடைந்தார். அவர்கள் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடனே கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் உயிரிழந்த ஆட்டோ டிரைவர் நூர் முகமது மற்றும் பஸ் டிரைவர் மார்ட்டின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான முழுமையான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்த சம்பவம் கோவை மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Finally found a link that actually works without any glitches. The login process is seamless. Cheers to brazino777login for the great service.
This place really brings the luck. I had a great winning streak last night and the customer support was very helpful with my withdrawal. Visit warunghoki888 for some good vibes.
Super easy registration and I was playing within minutes. The mobile version is just as good as the desktop one. Love 75jililogin