கோவையில் ‘பேலட் பேப்பர்’ அச்சடிக்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என கடந்த 9ம் தேதி மதியம் 3 மணிக்கு இறுதி செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டுள்ளது. ஒரிரு நாளில் இந்த பேலட் பேப்பர்…

Read More

நாளை முதல் 85 வயதானவர்கள் தபால் ஓட்டு போடலாம்…

கோவை மாவட்டத்தில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் வீடுகளுக்கு சென்று தபால் ஒட்டு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே படிவம் 12டீ விண்ணப்பம் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்ற தொகுதியில் 7583 மூத்த வாக்காளர்கள் (85 வயது கடந்தவர்கள்), 1692 மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. படிவத்தில் விண்ணப்பிக்காதவர்கள் தபால் வாக்களிக்க இயலாது. பூர்த்தி செய்த வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்க வாக்கு பதிவு அலுவலர்…

Read More

ஓட்டு போட மாட்டோம் என கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

கோவையில் கணபதி மாநகரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 35 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியது. அங்கு இருந்த நிலத்தை கையகப்படுத்தி அங்கு உயர், மத்திய மற்றும் குறைந்த வருவாய் பிரிவுகளில் 1,005 வீடுகளை கட்டியது. அதற்கு உரிய தொகை உரிமையாளர்களிடம் பெறப்பட்டது. ஆனால் அதற்கான பத்திரங்களையும், தடையில்லா சான்றையும் இதுவரை வழங்கவில்லை. இதனால் கணபதி மாநகர் வீட்டு உரிமையாளர்கள் கூட்டுக்குழு தொடங்கி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கணபதி மாநகர் வீட்டு உரிமையாளர்கள் கூட்டுக்குழுவினர் இன்று காலை தங்கள்…

Read More

கோவையில் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது

கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் கூலி தொழிலாளி. 32 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்வதி( 26) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பார்வதி தர்பூசணி கடை நடத்தி வருகிறார்.கடந்த சில மாதங்களாக சரத்குமாருக்கு அவர் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. அடிக்கடி மனைவியிடம் அவர் வாக்குவாதம் செய்து வந்தார். நேற்று பார்வதி கடையில் இருந்தார். அப்போது அங்கே வந்த சரத்குமார் அவரிடம் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக…

Read More

தேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை

பைல் படம் கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. 3563 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் தலைமை ஒட்டுச்சாவடி அலுவலர், இரண்டு உதவி அலுவலர், ஒரு உதவியாளர் என 4 பேர் பணியாற்ற உள்ளனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஓட்டு மெஷின் செயல்பாடு தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளில் தலைமை ஒட்டு சாவடி…

Read More

கோவையில் தேர்தல் பறக்கும் படை சோதனை: டிபன் பாக்ஸ், பாத்திரங்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான…

Read More

தேர்தலில் ஓட்டு போட 12 ஆவணங்கள் பயன்படுத்த அனுமதி…

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர் அடையாளம் காணும் செயல்முறைகள் குறித்து கீழ்கண்ட வழிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. வாக்காளர்கள் 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 62-ஆம் பிரிவின் கீழ் அவர்களுடைய உரிமையை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்காக, வாக்காளர்கள், ஆள்மாறாட்டம் செய்யப்படுவதைத் தடுக்கிற நோக்கத்துடன், 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் 61-ஆம் பிரிவு வழிவகை செய்துள்ளது. வாக்குப்பதிவின்போது,…

Read More

பிரதமர் மோடி கோவை வருகை; அண்ணாமலை புறக்கணிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் , முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பலர் வரவேற்பு வழங்கினர். இதைத் தொடர்ந்து அவர் தனி ஹெலிகாப்டர் மூலமாக கோவை விமான நிலையத்திலிருந்து பாலக்காட்டிற்கு புறப்பட்டு சென்றார். கேரள மாநிலத்தில் வரும் ஒன்பதாம் தேதி சட்டமன்றத்…

Read More

தேர்தல் வேலை வேண்டாம்: 2000 அரசு ஊழியர்கள் பணி விலகல் மனு

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 17,122 ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். 3563 ஓட்டு சாவடிகளில் ஒரு ஓட்டு சாவடிக்கு 4 பேர் வீதம் பணி செய்ய இருக்கிறார்கள். இவர்களுக்கும், 10 சதவீதம் ரிசர்வ் ஊழியர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்வித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணி, மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி உள்பட பல்வேறு துறைகளில் இருந்து அரசு ஊழியர்கள் பணி ஆணை பெற்றனர். பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு என்ன பதவி…

Read More

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கோவையில் 10 புகார் பதிவு…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை பெற கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது. இதில் 10 சட்டமன்ற தொகுதிகள் கண்காணிக்கப்படுகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படைகளை கண்டறிய ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது. தினமும், ஒவ்வொரு வாகனமும் எந்த ஏரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் 1950, 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண், 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி எண்கள்…

Read More