கோவையில் காதலியின் நண்பரை கொலை செய்த 2 பேர் கைது

கோவை தடாகம் ரோடு மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (24). போட்டோகிராபர் இவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் போட்டோ சூட் இருப்பதாக தனது குடும்பத்தினருடன் கூறி சில நாட்களுக்கு முன்பு சென்றார். ஆனால் அவர் திரும்ப வரவில்லை. இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் தடாகம் போலீசில் புகார் அளித்தனர். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே ரயில் பாதையில் வாலிபர் சடலம் கிடந்தது. போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரணை செய்தபோது காணாமல் போன பிரவீன்…

Read More

அலுவலகத்தில் அதிகாரிகளின் செக்ஸ் டார்ச்சர்: கோவை சமூக நலத்துறையினர் விசாரணை…!

கோவை மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர் கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013ம் ஆண்டு ஒன்றிய அரசினால் ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அதன் கிளை நிறுவனங்கள் என அனைத்திலும் தனித்தனியான உள் புகார் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இது 5 உறுப்பினர்களைக் கொண்டு இருக்க வேண்டும். உள்புகார் குழு தலைவராக…

Read More

கோவை GH:காண்டம், கருத் தடை மாத்திரை பாக்கெட்டுகள் காணோம்… !

கோவை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு மற்றும் மகப்பேறு மருத்துவ பிரிவில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இங்கே பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுடன் கணவர், குடும்பத்தினர் பார்வையாளர்களாக தங்கி இருந்து கவனித்து வருகின்றனர். இந்த சிகிச்சை பிரிவுகளில் குழந்தை பேறு தவிர்க்கும் வகையில் காண்டம் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்க அறிவிப்பு வைத்து அங்கே தனி பெட்டி அமைத்தனர். அதில் காண்டம் பாக்கெட் குவித்து வைத்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த பெட்டி…

Read More

முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க விட மாட்டேன், கவசமாக இருப்பேன்… கோவையில் வைகோ ஆவேசம்…!

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: குறிப்பிட்ட ஒரு பத்திரிகை என்னை புண்படுத்தும் விதமாக கேள்வி கேட்டபோது பொறுமையாக பதில் சொன்னேன். திரும்ப, திரும்ப கேள்வி கேட்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு உள்ள சுதந்திரம் எனக்கும் உள்ளது. எனக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. நான் வருத்தம் தெரிவித்தேன். மூன்று தினங்களுக்கு முன்பு கருவேல மரங்களை அகற்ற சென்றபோது, மீண்டும் அதே பத்திரிகை நிருபர் புண்படுத்தும் விதமாக கேள்வி…

Read More

மின்வாரியத்தில் பதவி உயர்வில் விதிமுறை மீறல்…!?

கோவை மின்வாரியத்தில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் பணியிட மாறுதல் விவகாரத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சரின் தலையீடு இருப்பதாகவும், அவரது சிபாரிசின் பேரில் சில ஊழியர்கள் பணியிட மாறுதல் செய்யாமல் அதே அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மின் பணியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கோவை மின் மண்டலம் உள்பட அனைத்து மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து அலுவலகத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் பணியிட மாறுதல் மற்றும் விருப்ப இடமாறுதல் பெற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் பணியில் சேர வேண்டும் என…

Read More

பாரதியார் பல்கலையில் பிஎச்டி விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு…

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி முழு நேரம், பகுதி நேர படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வரும் 9ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலுள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பகுதி நேரம் மற்றும் முழுநேர பிஎச்.டி ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர பல்கலை.யின் www.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது….

Read More

கோவையில் யூரியா மூட்டை கடத்தலுக்கு உதவிய அதிகாரிகளை தப்ப வைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு…

கோவை மதுக்கரை பகுதியில் விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா உரத்தை டன் கணக்கில் கடத்தி, ரகசியகுடோனில் திரவமாக மாற்றி கேரளாவுக்குக் கடத்த முயன்றதாக புகார் வந்தது. மதுக்கரை வழுக்குபாறை தமனா தோட்டம் மற்றும் ரொட்டி கவுண்டன் புதூரில் சோதனை நடந்தது. இதில் 43 லட்ச ரூபாய் மதிப்பிலான 128 டன் எடையிலான யூரியா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இங்கே யூரியா மூட்டைகள் கடத்தி வந்து பதுக்கி வைத்து…

Read More

சூலூர் சிறப்பு எஸ்ஐ தூக்கில் தற்கொலை

கோவை மாவட்டம் நீலாம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ் ஐ ஆக வேலை செய்து வந்தவர் அப்புன்னி என்பவரின் மகன் மனோஜ் ( 54). இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சங்கரமங்கலம். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்து உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சிந்து ( 49 ) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மனைவி மற்றும் மகன்கள் கடந்த ஒரு வருடமாக…

Read More

900 பவுன் தங்க நகையை அபகரிப்பு: டாக்டர் மீது வழக்கு

கோவை கணபதி மாநகர் எஸ்.ஆர்.வி‌ நகரை சேர்ந்தவர் சண்முகபாண்டியன் (67). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இவரது இளைய மகள் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தை சார்ந்த முருகேசன் என்பவரது மகன், டாக்டராக பணிபுரிந்து வந்த விக்னேஷ் என்பவருக்கு சண்முகபாண்டியன் தனது இரண்டாவது மகளை கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்தவுடன் முருகேசன், தனது மனைவி வாசுகி, மகள் ஜீவிதா ஆகிய 3 பேருடன்…

Read More

கோவையில் முதியோர்களுக்கு டார்ச்சர்: 2 காப்பக வார்டன் மீது நடவடிக்கை…

கோவை மாவட்டத்தில் 319 மகளிர் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. இந்த விடுதிகளில் பெண்கள் பாதுகாப்பு, தரமான உணவு, அடிப்படை வசதிகள் உள்ளதா என சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அடிக்கடி கண்காணிப்பு பணி நடத்தப்படுகிறது. தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள் உரிய நேரத்திற்குள் விடுதிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தகவல் தெரிவிக்காமல் மகளிர் விடுதியை விட்டு…

Read More