டெட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால் எழுதியவர்கள் திணறல்…

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பிரத்யேக ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட் தேர்வு) இன்று பலத்த பாதுகாப்புடன் துவங்கியது. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 2.29 லட்சம் பேர் எழுதுகின்றனர். கோவையில் 8 மையங்களில் 2230 பேர் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை 10 மணிக்குத் துவங்கிய ‘தாள்-1’ தேர்வுக்காக, காலை 8 மணி முதலே தேர்வு மையங்களின் முன்பு…

Read More

கோவையில் கஞ்சா, ஆயில், LSD stamps, போதை மாத்திரை பதுக்கிய 10 பேர் கைது

கோவை மதுக்கரை கோவில்பாளையம் கிணத்துக்கடவு செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருள் ஒழிப்பதற்காக மாவட்ட போலீசார் இன்று தீவிர ஒருங்கிணைந்த சோதனையில் ஈடுபட்டனர் . உள்ளூர் போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர் . 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் 20.040 கிலோ கஞ்சா, உயர்க போதைப்பொருட்களான ( Synthetic drugs)கஞ்சா ஆயில் (Cannabis Oil), போதை மாத்திரை (Methamphetamine) போதை பேப்பர் ( LSD Stamp), பறிமுதல் செய்யப்பட்டது….

Read More

12 கடைகளில் ஷட்டர் லாக் உடைத்து கொள்ளை: கோவையை பதற வைத்த 2 பேர் கைது…!

கோவை அன்னூர் பகுதியில் உள்ள 12 கடைகளின் ஷட்டர் லாக் உடைத்து பணம் மற்றும் பல்வேறு பொருட்களை திருடி சென்றதாக புகார் பெறப்பட்டது. கொள்ளை நடந்த வணிக வளாக பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதில் இரண்டு திருடர்கள் முகத்தை மூடி குல்லா அணிந்து பூட்டை உடைத்து திருடிய காட்சி பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சில இடங்களில் திருடர்களின் முகம் தெளிவாக தெரிய வந்தது. அதை…

Read More

வீட்டு வசதி வாரியத்தில் இனி ஆன்லைன் டெண்டர் : அமைச்சர் ராஜ்குமார் தகவல்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகர், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், வீட்டு வசதி வாரிய தலைமைப் பொறியாளர் சரவணன், மேற்பார்வை பொறியாளர் ரங்கநாதன், செயற்பொறியாளர் ஜேக்கப் நாயகம், வெங்கடேஷ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமரன், நிர்வாகப்…

Read More

கோவை மாவட்டத்தில் கல் குவாரிகளில் ட்ரோன் சர்வே விரைவில் நிறைவு…

கோவை மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது. கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, அரசுக்கு முறையாக செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி சீல் வைக்க வேண்டும். குவாரிகளில் கனிமம் எடுக்கும் அளவு முறைப்படுத்த வேண்டும்…

Read More

சிறுவாணி அணைப்பகுதியில் கனமழை: நீர்மட்டம் உயர்வு

சிறுவாணி அணை நீர்மட்டம் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 50 அடி தற்போது அணையின் நீர்மட்டம் 8.96 அடியாக இருக்கிறது. அணையிலிருந்து தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 45 மில்லி மீட்டர் மழை பெய்தது. நேற்று 16 மில்லி மீட்டர் மழையும், அதற்கு…

Read More

கோவை மாவட்டத்தில் 197 டாஸ்மாக் பார்கள் மூடல்

கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தது. இவற்றில் கடந்த சில நாட்களுக்கு முன் 69 மதுபான கடைகள் மூடப்பட்டது. பள்ளி, கல்வி நிறுவனங்கள் அருகேயுள்ள கடைகள் மூடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 229 மதுபான கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் மாநில அளவில் டாஸ்மாக் பார்களை மொத்தமாக மூடி சீல் வைக்க நேற்று மாலை உத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி இன்று அனைத்து பார்களும் அதிரடியாக மூடி சீல் வைக்கப்பட்டது. கோவை வடக்கு கலால்…

Read More

ஆவின் ஆப் வேண்டாம்… ஏஜென்டுகள் மறியல் போராட்டம்

கோவையில் ஆவின் செயலி பயன்பாட்டை கட்டாயப்படுத்தும் கோவை மாவட்ட ஆவின் நிர்வாகத்தை கண்டித்து, ஆவின் முகவர்கள் தடாகம் ரோட்டில் உள்ள ஆர்எஸ்புரம் ஆவின் அலுவலகம் முன்பு இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஒன்றியம் ஆவின் முகவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகையை, நாளை முதல் தினமும் ஆவின் செயலி மூலமாகவே வழங்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவால், தங்களுக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு…

Read More

கோவையில் 4.3 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது

கோவை நகரில் கஞ்சா கடத்தி விற்பதாக புகார் வந்தது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மியான்டிட் மனோ தலைமையிலான போலீசார் ரகசிய தகவல் அடிப்படையில் சுங்கம் பகுதியில் சோதனை செய்தனர். கார் மற்றும் பைக்கில் வந்த 3 பேரிடம் சோதனை செய்யப்பட்டது. அப்போது காரில் 4.3 கிலோ எடையிலான கஞ்சா இருந்தது. போலீசார் இவற்றை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தி வந்த போத்தனூர் சீனிவாசன் நகரை சேர்ந்த மணிமாறன் (28), பிள்ளையார் புரம் பகுதியை சேர்ந்த நவரத்தினவேல்…

Read More

டாஸ்மாக் சரக்கு ஒரிஜினலா… புதுசா வந்தாச்சு ஹலோகிராம் ஸ்டிக்கர்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானங்களில் போலியை கண்டறியும் வகையிலான பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. மாநில அளவில் டாஸ்மாக் மதுபானங்களில் ஒட்டுவதற்கு புதிய ஒளிரும் தன்மை கொண்ட ஹாலோகிராம் ஸ்டிக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. போலி மதுபானங்களை கண்டறிய உண்மையான மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்ய இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்காக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலால் துணை கமிஷனர் சாதனை குரல் தலைமையில்…

Read More