கோவை மாநகராட்சியில் ஏ ஐ வீடியோ போட்டும் குப்பை தரம் பிரிக்க மாட்டேங்குறாங்க…

கோவை மாநகராட்சி சார்பில் குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து பெற்று வருகின்றனர். ஆனால் பலரும் வேலைக்கு செல்லும் அவசரம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் அவசரத்தில் குப்பைகளை தரம் பிரிக்காமல் அப்படியே கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். சிலர் குப்பைகளை சாலையோரத்தில் வீசிவிட்டு செல்கின்றனர்.இந்த நிலையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை…

Read More

வடகிழக்கு பருவ மழை பாதிப்பு கோவையில் அதிகாரிகள் ஆலோசனை…

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில் கடும் வெயிலுக்கு பிறகு இந்த மழை வந்தது. நேற்று 236 மிமீ மழை பதிவானது. நகரின் உள் பகுதியில் மழையின் தாக்கம் உச்சக்கட்டமாக இருந்தது. குறைந்த நேரத்தில் காற்றுடன் அதிக மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதியில் இருந்த சாக்கடை, மழை நீர் வடிகால், ராஜ வாய்க்கால், குள வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பல இடங்களில் வழக்கம்போல் பிளாஸ்டிக்,…

Read More

கோவை ரயில் நிலையம் செல்லும் முன் சிக்னல் கிடைக்காமல் நிறுத்தப்படும் ரயில்கள்..

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து அதிக வருவாய் தரக்கூடிய பிரதான ரயில் நிலையமாக கோவை இருக்கிறது. ஆனால் கட்டமைப்பு, பிளாட்பாரம் பார்க்கிங், பயணிகள் வசதிகளில் கோவை ரயில் நிலையம் மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. பிளாட்பாரங்களில் ரயில் நகர்ந்தால்தான் அடுத்து ரயில் வந்து நிறுத்த முடியும் என்கிற பரிதாப நிலைமை தொடர்கிறது. ரயில் நிலையத்தில் 1 முதல் 6 பிளாட்பாரம் இருக்கிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 முதல் 3 பிளாட்பாரங்கள் வழியாக வந்து செல்கிறது. பாசஞ்சர் மற்றும்…

Read More

கோவை சிறையில் ஆசனவாயில் கஞ்சா கடத்தியவர் கைது…

கோவை சிறைக்குள் நூதனமான முறையில் கஞ்சா கடத்திய கைதி போலீஸ் சோதனையின்போது சிக்கினார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் பெருமாள் மகன் சுரேஷ் (25). இவர் கடந்த மே மாதம் கஞ்சா வழக்கில் கோவை சுந்தராபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து சுரேசை விசாரணைக்கு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை மீண்டும் கோவை மத்திய சிறைக்கு…

Read More

கோவையில் தாய் மகனுடன் கிணற்றில் குதித்த இளம் பெண் சாவு…

கோவை சிங்காநல்லூரில் குடும்ப தகராறில் தாய் மகள் உட்பட 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இவர்களில் மகள் பரிதாபமாக இறந்தார். 2 பேர் மீட்கப்பட்டனர். கோவை சிங்காநல்லூர் ராவத்தூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி பீணா (43), மகள் ரம்யா (25), ரம்யாவின் கணவர் சனூப். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 20 நாட்களாக ரவிக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதேபோல்…

Read More

தொடர் விடுமுறை… பூட்டிய வீடுகளை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவு

: கோவை நகர், புறநகரில் நகை பறிப்பு, பிக்பாக்கெட், வழிப்பறி கணிசமாக நடக்கிறது. பொதுமக்கள் சிலர் விடுமுறை மற்றும் விசேஷ நிகழ்ச்சியில் நடக்கும் போது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விடுகிறார்கள். கணவர், மனைவி வேலைக்கு சென்று விடுவதாலும், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதாலும் பெரும்பாலான வீடுகள் பகல் நேரத்தில் பூட்டி கிடக்கிறது. இரவு நேரத்தில் சிலர் வெளியூர் செல்லும் போது வீட்டை பூட்டி செல்கிறார்கள். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டுவதாக…

Read More

பெரியார் நூலகத்திற்கு 45 ஆயிரம் புத்தகங்கள் வரவில்லை…

தமிழக முதல்வர் விஜய் நாளை (16ம் தேதி) பெரியார் நூலகத்தை திறந்து வைத்து மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். கோவை காந்திபுரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரமாண்ட லைப்ரரி, தகவல் தொழில்நுட்ப அரங்கம் அமைக்கும் பணி நடந்தது. சுமார் 300 கோடி ரூபாய் செலவில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அசத்தலான தோற்றத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த…

Read More

ரேஷன் கடைகளில் பெயரளவுக்கு வெங்காயம் விற்பனை…

கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பெயருக்குத்தான் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது என மக்கள் புலம்புகின்றனர் தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரியவெங்காயம் விலை பலமடங்கு உயர்ந்தது. கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து பெரிய வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறை மூலம் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் 1 கிலோ ரூ 35க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு ரேஷன்கார்டிற்கு 1 கிலோ பெரிய வெங்காயம் மட்டுமே வழங்கப்படும் என…

Read More

கல்வித்துறை கட்டுப்பாட்டில் பெரியார் நூலகம்…

கோவை காந்திபுரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரமாண்ட லைப்ரரி தகவல் தொழில்நுட்ப அரங்கம் அமைக்கும் பணி நடந்தது. சுமார் 300 கோடி ரூபாய் செலவில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அசத்தலான தோற்றத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.இந்த7 மாடி வளாகத்தில் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 சீட் உள்ள கலையரங்கம், அறிவியல் மையம் கோளரங்கம் ஆகியவை உருவாக்கப்பட்டது. முதல்…

Read More

செந்நிறமாக மாறிய பில்லூர் குடிநீர்…

கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர், பவானி, ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சமீபத்தில் மழை பெய்தது குறிப்பசு பவானி, பில்லூர் நீர் தேக்க பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குடிநீர் செந்நிறமாக மாறி விட்டது. குடிநீரை சுத்தம் செய்து தெளிவித்து சப்ளை செய்யாமல் கலங்கலாக அப்படி அனுப்புவதாக தெரிகிறது. தினமும் 13 கோடி லிட்டர் பில்லூர் குடிநீர் கோவை நகர் புறநகருக்கு சப்ளையாகிறது. இந்த…

Read More