கோவையில் 17ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்…
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
ஜூலை மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 17ம் தேதி காலை |10 மணி முதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நேரிடையாக நடைபெற உள்ளது. இம்முகாமிற்கு 10 மற்றும் பிளஸ்2, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ,
பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள வயதுவரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் |இம்முகாமில் கலந்துகொண்டு பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை அப்போதே வழங்கப்படும். இதில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் | கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் www.ncs.gov.in www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். விருப்பமுள்ள மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக தரலாம். விவரங்களுக்கு
0422-2642388 என்ற தெலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும். தனியார் மருத்துவமனையில் ஏஎன்எம்,ஜிஎன்எம் மற்றும் பிஎஸ்சி நர்சிங் படித்தவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது. இக்கல்வி தகுதியை உடைய மனுதாரர்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெறலாம் என வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
