கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை…

கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள பிபிஜி பொறியியல் கல்லூரியில் பி டெக் ஐ டி படித்து வந்தவர் நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பகுதியை சேர்ந்த ரகு என்பவரது மகள் மகாலட்சுமி (21). இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இன்று மதியம் இவர் கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக கோவில் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மாணவி தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. விடுதியில் தங்கியிருந்த பிற மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாணவியின் செல்போன் தொடர்பு குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாணவி சிறந்த படிப்பு திறன் கொண்டவர் என தெரியவந்துள்ளது. மன உளைச்சல் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டாரா வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என போலீசார் விசாரிக்கின்றனர். மாணவியின் தற்கொலை காரணமாக கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *