கோவையில் 4.3 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது
கோவை நகரில் கஞ்சா கடத்தி விற்பதாக புகார் வந்தது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மியான்டிட் மனோ தலைமையிலான போலீசார் ரகசிய தகவல் அடிப்படையில் சுங்கம் பகுதியில் சோதனை செய்தனர்.
கார் மற்றும் பைக்கில் வந்த 3 பேரிடம் சோதனை செய்யப்பட்டது. அப்போது காரில் 4.3 கிலோ எடையிலான கஞ்சா இருந்தது. போலீசார் இவற்றை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தி வந்த போத்தனூர் சீனிவாசன் நகரை சேர்ந்த மணிமாறன் (28), பிள்ளையார் புரம் பகுதியை சேர்ந்த நவரத்தினவேல் (39), சங்கத்தை சேர்ந்த ஹரி சங்கர் (28) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த கும்பலுக்கும் இன்னொரு கஞ்சா வியாபாரிக்கும் நட்பு இருப்பதாக தெரிகிறது. அந்த வியாபாரி ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்து வந்தார். அவர் போலீசில் சிக்கி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் தொடர்பில் இருந்த கஞ்சாவை மணிமாறன் குழுவினர் தங்களது கட்டுபாட்டில் கொண்டு வந்தனர்.
இதனை விற்பனை செய்ய கடத்தி சென்ற போது போலீசில் பிடிபட்டதாக தெரிகிறது. 5 கிராம் கஞ்சா பாக்கெட்டை இவர்கள் 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். கஞ்சாவிற்கு அதிக மவுசு இருப்பதால் இந்த கடத்தலில் இவர்கள் தீவிரம் காட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
