பச்சை மரங்களை வெட்டி போட்டாங்க… கலெக்டரிடம் புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக குறை கீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்த கைலாச கிரி என்பவர் அளித்த மனுவில், “முன்னாள் படைவீரராக பணியாற்றிய என் தந்தைக்கு இடம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

பட்டா கேட்டு விண்ணப்பித்தும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. பல முறை தாசில்தார் அலுவலகம் சென்றும் தீர்வு கிடைக்கவில்லை. ” என தெரிவித்தார்.

நீலிக்கோணம்பாளையம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி கொடுத்த மனுவில், “நான் மேற்கு வீதியில் 30 ஆண்டு வசிக்கிறேன். என் வீட்டிற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. பல ஆண்டாக மின் இணைப்பும் வழங்கவில்லை. எந்த அடிப்படை வசதியும் இன்றி நான் தவிக்கிறேன், பட்டா கேட்டால் தொடர்ந்து நிராகரிக்கிறார்கள்,” என்றார்.

தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்த ரவிக்குமார், “ஸ்ரீலட்சுமி நகரில் கிளைகள் வெட்ட வேண்டும் என அனுமதி 7 புளிய மரங்களை வெட்டி விட்டார்கள். அதிகாரிகள் ஜியோ டேக் மூலமாக பார்த்தால் பசுமையான மரங்கள் வேறுடன் வெட்டிய விவரங்கள் தெரியும். அனுமதி மீறி இதுபோன்ற செயல்கள் நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க வேண்டும். ” என தெரிவித்தார்.

சூலூர் பகுதி ஆட்டோ டிரைவர்கள், “ரேபிட்டோ, உபேர், ஓலா பைக் டாக்சிகளை தடுக்க வேண்டும். தடையை மீறி இந்த பைக் டாக்சிகள் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சூலூர் பகுதிகளில் இந்த வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க வேண்டும். என்றனர்.

கோவை மாநகராட்சி 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி அளித்த புகார் மனுவில், ” வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் நியாய விலை கடைகளில் பொருள் வாங்குவதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு வீடு தேடி வந்து பொருள் கொடுப்பதில்லை. அதோடு கைரேகையும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டத்தின் இன்னும் ஏராளமான பயனாளர் அந்த பட்டியலில் சேர்க்கப் படாமல் உள்ளனர். வயதானவர்களுக்கான கைரேகை பதிவாகாமல் இருக்கிறது, பீளமேட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவுகளில் பிரச்னை இருக்கிறது. இதை சரி செய்ய வேண்டும். ” என தெரிவித்துள்ளார்.

One thought on “பச்சை மரங்களை வெட்டி போட்டாங்க… கலெக்டரிடம் புகார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *