கணவரை காணவில்லை… பெண் குடும்பத்தினருடன் புகார்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் இன்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த மேகலா (45) என்பவர் தனது தாய், குழந்தைகள், உறவினர்களுடன் அளித்த புகார் மனுவில், ” என் கணவர் பெயர் முருகன் (49), கட்டட தொழிலாளி. எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர், என் கணவர் சூலூர் பகுதியில் கட்டட வேலை செய்து வருகிறார். அவர் கடந்த மாதம் 24ம் தேதி சூலூர் பகுதியில் தனியார் கல்லூரி கல்லூரி அருகே நடந்த விபத்தில் காயம் அடைந்ததாக தெரிவித்தார்கள். ஆனால் அவரை பார்க்க சென்றபோது அவரை காணவில்லை. அவரது வாகனம் மற்றும் செல்போன் மட்டும் அங்கே இருந்ததாக சக தொழிலாளர்கள் தெரிவித்தனர். காயமடைந்த என் கணவர் எங்கே போனார் என தெரியவில்லை. அவருக்கு என்ன ஆனது, உயிருடன் இருக்கிறாரா என தெரியவில்லை.
எனவே, இது தொடர்பாக விசாரித்து எனது கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் சூலூர் போலீசில் புகார் தந்தேன். ஆனால் போலீசார் இதுவரை கண்டறியவில்லை. என் கணவர் வேலை செய்யும் கட்டட மேஸ்திரி உரிய விவரங்கள் தெரியவில்லை என்கிறார். என் கணவர் இல்லாமல் நாங்கள் தவிப்படைந்து இருக்கிறோம். இதில் மர்மம் இருக்கிறது” என தெரிவித்தார்.
கோவிந்தநாய்க்கன் பாளையம் பகுதியை 70 வயது மூதாட்டி அளித்த புகாரில், ” என் மகன் வழி பேரன் தினமும் என்னிடம் தகராறு செய்து செய்கிறார். உடல் நிலை பாதிக்கப்பட்ட என்னை தாக்குகிறார். அவர் மனைவியும் கூட சேர்ந்து என்னை தாக்கி வருகிறார். நான் தான் அவருக்கு திருமணம் செய்து வைத்தேன். என் வீட்டில் வசிக்க அனுமதி வழங்கினேன்.
இப்போது என்னால் வீட்டில் வாழ முடியாத நிலைமை இருக்கிறது. என் வீட்டிலிருந்து என் பேரனை
வெளியேற்ற வேண்டும் நான் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தந்தேன், போலீசார் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது” எனக்கூறினார் போலீசார் அலட்சியமாக இருப்பதாக கூறிய அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். கோவையை சேர்ந்த 25 வயது இளம்பெண் அளித்த மனுவில், “நான் திருமணம் செய்து விவாகரத்து பெற்றேன். என் பெற்றோர் என்னை ஏற்கவில்லை. என் கல்வி சான்று இதர ஆவணங்களை தர மறுக்கிறார்கள். வீட்டில் இருந்த என் பொருட்களை என் பெற்றோர் வசம் இருந்து பெற்று தரும்படி நான் காட்டூர் போலீசில் புகார் தந்தேன். போலீசார் விசாரிக்கவில்லை.
ஒரு முறை போலீசார் வந்து கேட்ட போது, பொருட்களை தருவதாக என் பெற்றோர் கூறினர். ஆனால் போலீசார் சென்ற பின்னர் எதுவும் தரவில்லை. எனக்கு மன உளைச்சலாக இருக்கிறது. விடுகியில் தங்கி நான் வேலைக்கு சென்று என்னை காப்பாற்றி கொள்ள கூட வழியில்லாத அவல நிலையில் இருக்கிறேன்” என தெரிவித்தார்.

The winning streaks here are insane. I tried a few others but this one feels way more rewarding. Just log into mahagacor77login and see for yourself.