வீட்டு வசதி வாரியத்தில் இனி ஆன்லைன் டெண்டர் : அமைச்சர் ராஜ்குமார் தகவல்…!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகர், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், வீட்டு வசதி வாரிய தலைமைப் பொறியாளர் சரவணன், மேற்பார்வை பொறியாளர் ரங்கநாதன், செயற்பொறியாளர் ஜேக்கப் நாயகம்,
வெங்கடேஷ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமரன், நிர்வாகப் பொறியாளர் சுதாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி, வருவாய் கோட்டாட்சியர் மாருதிபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டிய வீட்டு மனைகள், கணபதி உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், சிங்காநல்லூர் மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புத் திட்டங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வகை, பரப்பளவு மற்றும் வாடகை விவரங்கள், மனைகளின் விவரங்கள்,
விற்பனை செய்யப்பட வேண்டிய மனைகளின் விவரங்கள், தனியார் கட்டுமான அமைப்புகள் மற்றும் நலச்சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மறு கட்டுமானத் திட்டங்கள், பொள்ளாச்சி தவணைமுறை அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்கள்,
சீரநாயக்கன்பாளையம் தவணைமுறை அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டம், அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகளின் மறு கட்டுமானத் திட்டங்கள்
சரவணம்பட்டி, கணபதி மற்றும் சிங்காநல்லூரில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட அளவில் இடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள வாரிய கட்டிடங்களின் விவரங்கள், ரேஸ்கோர்ஸ் பேஸ் | காலனி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வளாகம் தொடர்பான விவரங்கள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களின் முன்னேற்ற நிலை,
தீர்வு காணப்பட வேண்டிய நிலுவை விவரங்கள், நிலம் கையகப்படுத்தும் பணிகளின் தற்போதைய நிலை, மனுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை மற்றும் அதன் தற்போதைய நிலை, இழப்பீடு வழங்கப்பட்ட வழக்குகளின் விவரங்கள், தடுப்புச் சுவர் மற்றும் தளவமைப்பு தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், மாவட்டத்தில் உக்கடம் சி.எம்.சி. காலனி, வெரைட்டி ஹால் சாலை, எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது. முன்னதாக அமைச்சர் பல்வேறு பகுதிகளில் நடக்கும் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். ஆன்லைன் மூலமாக மட்டுமே இனி டெண்டர் விட்டு பணிகள் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
கோவை, ஜூலை 3: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகர், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், வீட்டு வசதி வாரிய தலைமைப் பொறியாளர் சரவணன், மேற்பார்வை பொறியாளர் ரங்கநாதன், செயற்பொறியாளர் ஜேக்கப் நாயகம்,
வெங்கடேஷ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமரன், நிர்வாகப் பொறியாளர் சுதாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி, வருவாய் கோட்டாட்சியர் மாருதிபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டிய வீட்டு மனைகள், கணபதி உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், சிங்காநல்லூர் மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புத் திட்டங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வகை, பரப்பளவு மற்றும் வாடகை விவரங்கள், மனைகளின் விவரங்கள், விற்பனை செய்யப்பட வேண்டிய மனைகளின் விவரங்கள், தனியார் கட்டுமான அமைப்புகள் மற்றும் நலச்சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மறு கட்டுமானத் திட்டங்கள், பொள்ளாச்சி தவணைமுறை அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்கள்,
சீரநாயக்கன்பாளையம் தவணைமுறை அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டம், அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகளின் மறு கட்டுமானத் திட்டங்கள்
சரவணம்பட்டி, கணபதி மற்றும் சிங்காநல்லூரில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட அளவில் இடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள வாரிய கட்டிடங்களின் விவரங்கள், ரேஸ்கோர்ஸ் பேஸ் | காலனி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வளாகம் தொடர்பான விவரங்கள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களின் முன்னேற்ற நிலை, தீர்வு காணப்பட வேண்டிய நிலுவை விவரங்கள், நிலம் கையகப்படுத்தும் பணிகளின் தற்போதைய நிலை, மனுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை மற்றும் அதன் தற்போதைய நிலை, இழப்பீடு வழங்கப்பட்ட வழக்குகளின் விவரங்கள், தடுப்புச் சுவர் மற்றும் தளவமைப்பு தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், மாவட்டத்தில் உக்கடம் சி.எம்.சி. காலனி, வெரைட்டி ஹால் சாலை, எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது. முன்னதாக அமைச்சர் பல்வேறு பகுதிகளில் நடக்கும் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். ஆன்லைன் மூலமாக மட்டுமே இனி டெண்டர் விட்டு பணிகள் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
