கோவை மாவட்டத்தில் கல் குவாரிகளில் ட்ரோன் சர்வே விரைவில் நிறைவு…

கோவை மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது.

கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, அரசுக்கு முறையாக செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி சீல் வைக்க வேண்டும். குவாரிகளில் கனிமம் எடுக்கும் அளவு முறைப்படுத்த வேண்டும் .

தினமும் எத்தனை கனமீட்டர் அளவிற்கு கனிம பொருட்கள் சேகரிக்கப்படுகிறது.

கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலமாக கண்டறியப்பட்டு வருகிறதா, கேரளா மாநிலத்திற்கு சப்ளை செய்யப்படும் கனிமங்கள் அளவு குறித்த விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 5 குழுக்களாக பிரித்து டிரோன் சர்வே நடத்தப்படுகிறது. 140 குவாரிகளில் பணி நடக்கிறது.

இதில் 125 குவாரிகளில் சர்வே முடிந்தது. இன்னும் 15 குவாரிகளில் சர்வே முடியும் வாய்ப்புள்ளது. விரைவில் முறைகேடு செய்த குவாரிகளுக்கு அபராதம் மற்றும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதிக ஆழம், அதிக கூடுதல் பரப்பில் கனிமம் தோண்டி எடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இல்லீகல் மைனிங் செய்யப்பட்டதா எனவும் சர்வேயில் சிறப்பு கவனத்துடன் சோதனை செய்யப்பட்டது. ஒவ்வொரு குவாரியிலும் 5 மணி நேரம் முதல் 8 மணி நேரம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

முறைகேடு குவாரிகளுக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் நிலையிருப்பதால் குவாரி உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *