சிறுவாணி அணைப்பகுதியில் கனமழை: நீர்மட்டம் உயர்வு
சிறுவாணி அணை நீர்மட்டம் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 50 அடி தற்போது அணையின் நீர்மட்டம் 8.96 அடியாக இருக்கிறது.
அணையிலிருந்து தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 45 மில்லி மீட்டர் மழை பெய்தது. நேற்று 16 மில்லி மீட்டர் மழையும், அதற்கு முந்தைய தினம் 19 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. மழையின் காரணமாக தற்போது அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது
. இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் கூறுகையில், ” அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை கனமழை தீவிரமாகி வருகிறது. கடந்த காலங்களில் வறட்சியான நிலைமை காணப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நிலைமை மாறிவிட்டது. கனமழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்த்து இருக்கிறோம்.
இப்போதுள்ள தண்ணீர் இன்னும் 45 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும். தொடர்ந்து மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்தால் அணையில் இருந்து மேலும் கூடுதலாக குடிநீர் தர முடியும், – என்றனர்.
