கோவையில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற காம வெறியனை கடித்து விரட்டிய நாய்… !
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள Nggo காலனி அருகே உள்ள அசோகபுரம் மேம்பாலம் பகுதியில் மனநிலை பாதித்த 30 வயது மதிக்கத்தக்க பெண் தனிமையில் வசித்து வருகிறார்.
இந்த ஆதரவும் இல்லாத இவர் பிளாட்பாரத்தில் தங்கி உள்ளார். நேற்று இரவு இரண்டு மணி அளவில் அந்த வழியாக சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க போதையில் இருந்த நபர் அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தார்.
கையில கல் எடுத்து அங்கே இருந்த நாய்களை விரட்ட முயன்றார். மேலும் அந்த பெண்ணிடம் இந்த நாய் உங்களுடைய தா இது கடிக்குமா எனது விசாரித்தார். பின்னர் அவர் அந்த பெண்ணிடம் நெருங்கி சென்று அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சி செய்தார். ஆனால் அந்தப் பெண் அவரை தள்ளிவிட்டு கூச்சலிட்டார். உதவி கேட்டு அலறினார்.
ஆனால் அந்த நபர் விடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்தார். இதைப் பார்த்த அந்த நாய் துரத்தி வந்து அந்த காம போதை வெறியனை கடிக்க ஆரம்பித்தது. நாயின் கடி தாங்க முடியாமல் அந்த நபர் அங்கே இருந்து ஓட ஆரம்பித்தார். அந்த நாய் மட்டுமின்றி இன்னொரு நாயும் சேர்ந்து அந்த நபரை துரத்திக் கொண்டு ஓடின. திரும்ப அந்த நபர் அங்கே வரவில்லை.
இதைத் தொடர்ந்து அந்த பெண் அங்கே நிம்மதியாக இருந்தார். காவலுக்கு அந்த நாய்கள் அங்கே சுற்றிக் கொண்டிருந்தன. காலை அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு வந்த வியாபாரி ஒருவர் தனது கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டார். அப்போது மனநிலை பாதித்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூர நிலை தெரிய வந்தது. நாய்கள் உதவியாக இருந்து காப்பாற்றிய உண்மை அறியவந்தது.
இந்த கண்காணிப்பு கேமரா பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மாவீரனாக துணிச்சலாக நின்று போராடி பெண்ணின் மானம் காப்பாற்றிய அந்த நாய்க்கு நன்றியுள்ள ஜீவனுக்கு பொதுமக்கள் வாழ்த்து வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Simple, direct, and efficient. No unnecessary fluff, just a great portal to get into the game. Big thumbs up for 11iclogin.