மதுக்கரையில் கொல்லப்பட்ட பெண் யார்?விபச்சாரிகளிடம் போலீசார் விசாரணை
கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கடந்த 24ம் தேதி கண்டறியப்பட்டது.
சுமார் 25 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. இது தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பெண் கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று இந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும்,
அந்த பெண் பயன்படுத்திய ஒரு ஜோடி செருப்புகள் கண்டறியப்பட்டது. 50 மீட்டர் தூரத்தில் அந்த பெண்ணின் நைட்டி கிடந்தது. இந்த செருப்பு, நைட்டியை வைத்து அந்தப் பெண் யார் என போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் காணாமல் போன இளம் பெண்கள் மற்றும் வெளியூரில் இருந்து கோவையில் தங்கி வேலை செய்யும் இளம்பெண்கள் குறித்து தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்
|பெண்ணின் கையில் ஜெகன், ஜேஎஸ் என எழுதப்பட்டிருந்தது. உடல் அழுகி போய் இருந்ததால் கற்பழிப்பு தொடர்பாக ஆதாரம் பெற முடியவில்லை. மருத்துவ அறிக்கையின் படி இறந்த பெண் பலரால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. கூட்டு பலாத்காரமாக இருந்தாலும் அந்த பெண்ணின் உடலில் பலாத்கார தாக்குதல்கள் எதுவுமில்லை என தெரிகிறது.
இறந்த பெண் யார் என தெரியாத நிலையில் விசாரணை முடங்கி போய் விட்டது. போலீசார் மதுக்கரை, செட்டிபாளையம், குனியமுத்தூர். கோவைப்புதூர் உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விபச்சார பெண்களிடம் விசாரணை நடத்தினர்.
இறந்த பெண்ணின் காதில் உள்ள கம்மல், தோற்றம் போன்றவை விபச்சார பெண் போல் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். விபச்சாரத்திற்காக பெண்ணை அழைத்து வந்து கூட்டு பலாத்காரத்தில் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இறந்த பெண் வடமாநிலம் அல்லது கேரளா, கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.
பெண் இறந்து கிடந்த இடத்தில் அடிக்கடி விபச்சாரம் நடப்பதாக தெரிகிறது. சிலர் கார் ஆட்டோவில் பெண்களை அழைத்து வந்து காட்டிற்குள் உல்லாசமாக இருப்பதாக தெரிகிறது. காடாக இருப்பதால் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு எதுவும் கிடைக்கவில்லை. எந்த ஆதாரமும் தடயமும் இல்லாமல் போலீசார் அடுத்த கட்ட விசாரணைக்கு செல்ல முடியாமல் திணறி கொண்டிருக்கின்றனர்.
