முத்தண்ண குளத்தில் செத்து மிதந்த மீன்கள்…
கோவை தடாகம் ரோடு முத்தண்ண குளத்தில் இன்று மீன்கள் அதிகளவு செத்து மிதந்தன.
இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் அங்கே சென்று பார்த்து ஆய்வு செய்தனர். குளத்தில் நச்சு கழிவுகளின் தாக்கம் அதிகமானதால் மீன்கள் இறந்து மிதப்பதாக கூறப்பட்டது.
தொழிற்சாலை கழிவுகள் குளத்தில் கலந்து விட்டதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நீரில் பி.எச் அளவு ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம். குளத்து நீரில் யாராது இறந்த மீன்களை போட்டு சென்றார்களா எனவும் அதிகாரிகள் விசாரித்தனர்.
இந்த குளத்தில் மீன் பிடிப்பு பணிகள் நடக்கிறது. குளத்திலிருந்த மீன்கள் இறப்பதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
