ரேஷன் கார்டில் பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்…

கோவை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை கார்டுகள் மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் பெற்றுள்ள ரேஷன்கார்டுதார்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் கைரேகை (Bio Metric) அல்லது கண்கருவிழி (Iris) பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணியின் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு, முன்னுரிமை கார்டு, முன்னுரிமையற்ற கார்டுகள் என 95 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளது. மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகள் 7033 முன்னுரிமை கார்டுகள் 49,324 மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் 3,41,425 என மொத்தம் 3,97,782 ரேஷன் கார்டுகள் விற்பனை முனைய இயந்திரத்தில் பயோ மெட்ரிக் (விரல் கைரேகை) அல்லது கண்கருவிழி பதி: செய்யாமல் நிலுவையில் இருந்தது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பயன்பெறும் அனைத்து ரேஷன்கார்டுதாரர்கள் கைரேகை பதிவு விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அல்லது அருகே உள்ள ரேஷன் கடைகளில் வரும் 31ம் தேதிக்குள் விரல்ரேகையினை பதிவேற்றம் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

வரும் 31ம் தேதி வரை விடுபட்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு பண நடக்கிறது.

இது தொடர்பாக தமிழக ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ” பயோ மெட்ரிக் பணிகளுக்காக ஊழியர்கள் தீவிரமாக வேலை செய்கிறார்கள். வீடு தேடி சென்று பதிவு பணிகளை செய்கிறார்கள். முன்னுரிமை இல்லாத கார்டுதாரர்கள் அதிகளவு விரல் ரேகை பதிவு செய்யவில்லை.

விரல் ரேகை பதிவு இல்லாத நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படுமா என்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை. ரேஷன்கார்டுதாரர்கள் தங்களவு விரல் ரேகை பதிவு செய்வது அவசியம். பொதுமக்கள் கடை ஊழியர்கள் வரும் போது போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிக்க வாய்ப்புள்ளது.

சிலருக்கு விரல் ரேகை பதிவாகவில்லை. சிலர் வெளியூரில் இருப்பதாலும், மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் பயோ மெட்ரிக் பதிவு செய்ய முடியாத நிலையிருக்கிறது. இறந்த கார்டுதாரர்களை இந்த கள ஆய்வின் போது எளிதில் கண்டறிய முடிகிறது, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *