கோவை மாநகராட்சியில் தரமற்ற பணிகள்: ஒப்பந்ததாரர்கள் மீது புகார்
கோவை மாநகர் பகுதியில் மழையினால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சாக்கடை, ரோடு, மழை நீர் வடிகால், மின் கம்பங்கள், கட்டடங்கள் சேதமாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக, சமீப காலமாக போடப்பட்டிருந்த ரோடுகள்கூட அதிகளவு பெயர்ந்து போயிருப்பதாக கூறப்படுகிறது.
மழை சேதங்களை ஆய்வு செய்த போது வடிகால், ரோடு, பாதாள சாக்கடை மற்றும் குள வாய்க்கால் பாதிப்பு அதிகமாக இருப்பதை கண்டறியப்பட்டது. இவற்றை சரி செய்ய வார்டு வாரியாக பொறியாளர் குழுவினர் மூலமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
மேலும், தரமின்றி கிட்ட பணிகள் செய்ய ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்பாகவும் விவரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கிறது, வடிகால்களில் முறையாக நீர் பாய வழிவகை செய்யாத ஒப்பந்த நிறுவனங்கள், கழிவறை மற்றும் பூங்கா, பள்ளி வளாகங்களை முறையாக பராமரிக்காத ஒப்பந்த நிறுவனங்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.
தரமின்றி பணிகள் செய்த ஒப்பந்த நிறுவனங்களை பிளாக் லிஸ்ட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் கடந்த 5 ஆண்டில் குறிப்பிட்ட சில ஒப்பந்த நிறுவனங்கள் மழை நீர் வடிகால் ரோடு சீரமைப்பு, சாக்கடை கால்வாய் பணிகளை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த பணிகளை தரமாக செய்யாமல் வெளிப்பூச்சு மட்டும் பூசி மெழுகி புதுசு போல் காட்டி ஏமாற்றியிருப்பதாக தெரிகிறது.
கால்வாய்கள் 6 மாத காலத்திற்குள் காணாமல் போனதை அறிந்த மாநகராட்சி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். புதிதாக போடப்பட்ட குடிநீர் குழாய்கள், பாதாள சாக்கடைகள் பொங்கி ஆறாக வெள்ளம் பாய்ந்த வீடியோக்கள் மாநகராட்சி வட்டாரத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. கடும் பாதிப்புகளை தவெக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தீர்க்காமல் அலட்சியமாக இருப்பதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒரு நாள் பெய்த மழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை விட அடுத்த நாள் மழையில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
|அமைச்சர் விக்னேஷின் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி, அமைச்சர் சம்பத்குமாரின் வடக்கு தொகுதியில் உச்ச கட்ட பாதிப்பு நிலவுகிறது. மருதமலை ரோட்டில் புதை மண், வெள்ளம், வாகனங்கள் வெள்ள நீரில் மாட்டிய விவகாரம் கோவை சோசியல் மீடியாக்களில் டிரெண்டிங் ஆக இருக்கிறது. மருதமலை கோயிலில் வெள்ளம் புகுந்து அதை கூட அகற்றாமல் வேடிக்கை பார்த்த விவகாரம் பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
போத்தனூர், சுந்தராபுரம், வெள்ளலூர் பகுதியில் மழை வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. ரோடு, வடிகால் உடைந்து போனதை ஆய்வு செய்து சீரமைக்கவில்லை என மக்கள் ஏமாற்றத்தில் புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

The variety of games is insane. There is always something new to explore and the community is pretty chill. Glad I found planetligalogin.
I’ve been trying a few different platforms lately and this one really stands out. The interface is smooth and the payouts are fair. Definitely worth a shot for anyone looking for a reliable spot. Check out batikslot77