பச்சை நிறத்தில் பாய்ந்த முத்தண்ணன் குளத்து தண்ணீர்…

கோவை முத்தண்ண குளத்தில் இருந்து செல்வசிந்தாமணி குளத்திற்கு உபரி வாய்க்கால் மூலமாக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

இதில் குளத்திலிருந்து பச்சை நிறத்தில் நெடியுடன் கூடிய தண்ணீர் பாய்ந்தது. துர்நாற்றம் வீசிய இந்த தண்ணீர் தொடர்பாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இந்த தண்ணீரில் வேதிப்பொருட்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. குளத்து நீர் பச்சையாக மாறியது ஏன் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கோவை நகரில் பல குளங்களில் குறிப்பாக பெரியகுளம், வாலாங்குளம் நீர் பச்சையாக இருக்கிறது. முத்தண்ண குளத்து நீர் பச்சையாக இருக்க அதில் சாக்கடை சகதி அதிகமாக இருக்கிறது.

இதில் அழுகிய ஆகாய தாமரைகள் மடிந்து கலந்து விட்டதால், அதன் மூலமாக பச்சை நிறம் உருவாகி விட்டதாக தெரியவந்தது. மேலும் பச்சை நிறம் வண்ணம் பூசிய போல் மிக அதிகமாக இருக்க வேறு எதாவது காரணம் இருக்கிறதா என விசாரணை நடக்கிறது. பொதுப்பணித்துறை செயற்பொறியார் சிவக்குமாரிடம் கேட்டபோது, “நீர் பாயும் பாதை பாசி படர்ந்துள்ளது. இந்த வழியாக போகும் தண்ணீர் பச்சையாக தெரிகிறது. மேலும் ஆகாய தாமரை தான் பச்சை நிறத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *