கோவையில் ஆன்லைன் டிரேடிங் என 2.50 கோடி ரூபாய் மோசடி..

கோவை மாநகர பகுதியை சேர்ந்தவர் 60 வயது தொழிலதிபர். இவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

அவர்களின் பேச்சை நம்பிய அவர் தனது வங்கி கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளாக ரூ.2 கோடியே 50 லட்சத்தை மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, தனக்குக் கிடைத்த லாபத் தொகையைத் தரும்படி அவர். மர்ம நபர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு மர்ம நபர்கள் மேலும் கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து அவர் விசாரித்த போது தான் அது மோசடி கும்பல் என்பது அவருக்கு தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 thoughts on “கோவையில் ஆன்லைன் டிரேடிங் என 2.50 கோடி ரூபாய் மோசடி..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *