கோவையில் குப்பையில் வீசப்பட்ட கோயில் சிற்ப தூண்கள்…!


கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் கார் நிறுத்தும் இடத்தில் இரண்டு சிற்பத்துண்கள் வைக்கப்பட்டுள்ளது.
எந்த பராமரிப்பும் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக இந்த சிற்பத்துண்கள் இங்கே காட்சி பொருளாக இருக்கிறது. கோயிலில் வைக்கப்பட வேண்டிய சிலைகள் உள்ள சிற்ப தூண்கள் இங்கே வந்தது எப்படி என யாருக்கும் தெரியவில்லை. இவற்றை இந்து சமய அறநிலையத் துறையினரும் கொண்டு செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதே போல் இதே வளாகத்தில் இரண்டு சிற்ப தூண்கள் குப்பைகளுக்கு இடையே தூக்கி வீசப்பட்டுள்ளது.
இதிலும் சிலைகள் வடிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறையினரிடம் கேட்டபோது, “இந்த சிலைகள் எப்போது யாரால் கொண்டு வந்து வைக்கப்பட்டது என தெரியவில்லை. கோனியம்மன் கோயிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். அந்த கோயில் நிர்வாகமும் எங்களிடம் இந்த சிலைகள் தொடர்பாக கேட்கவில்லை.
எங்கே ஒப்படைப்பது என தெரியாமல் நாங்கள் இங்கே வைத்திருக்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் இங்கே கோயில், பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே இருந்தது. சிலைகள் தூண்கள் அதிகளவு இங்கே இருந்தது. இவற்றில் இவை விடுபட்டிருக்கலாம் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Thanks for the write-up. I bookmarked seekpool.shop a while back and it’s worth a look too.
The app version is just seamless. Everything is so organized and easy to navigate. I’m really enjoying my time on bd4999betapk.
The promotions here are actually worth it. I managed to win a decent amount thanks to the welcome bonus. Big thanks to br7788bet9.