கோவையில் வீணாக கிடக்கிறது வேளாண் கட்டடங்கள்…

கோவை தடாகம் ரோட்டில் வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பயன்பாட்டின்றி கட்டிடங்கள் வீணாக கிடக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அலுவலகமாக இருந்த கட்டிடங்கள், விதை ஆய்வு மையம் பரிசோதனை கூடம் போன்றவை பயன்பாடின்றி இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. சில கட்டிடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. போதை கும்பல் இரவு நேரத்தில் இங்கே தங்கியிருந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு, மதுபாட்டில்கள், போதை மாத்திரைகள் கிடக்கிறது. மதுபானம் பயன்படுத்தும் சிலர் பாட்டில்களை உடைத்து வளாகத்திற்குள் வீசி செல்வதும் வாடிக்கையாக நடக்கிறது. இந்த வளாகத்தில் சில கட்டிடங்கள் நல்ல முறையில் இருக்கிறது. இங்கே ஆண், பெண் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். காம்பவுண்ட் சுவர் உடைந்து கிடப்பதால் அலுவலக வேலை நேரத்தில் கூட சமூக விரோத கும்பல் நடமாட்டம் இருக்கிறது.

இது தொடர்பாக தடாகம் பகுதி மக்கள் கூறுகையில், “வேளாண் பல்கலைகழகம் போலவே இந்த வளாகம் பெரிதாக விஸ்தாரமாக இருக்கிறது. இங்கே காலி இடங்கள் அதிகமாக எந்த பயன்பாடின்றி கிடக்கிறது. 8 அலுவலக கட்டிடங்கள் விரிசல் விட்டு பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. உள் பகுதியில் உள்ள கட்டிடங்களில் சிலர் இரவு நேரங்களில் தங்குகிறார்கள்.

அந்த கும்பல் யார் என தெரியாது அங்கே சென்று பார்க்க பயந்து கொண்டு யாரும் செல்வதில்லை. போலீசாரும் இங்கே வந்து பார்ப்பதில்லை, இங்கே என்ன நடக்கிறது என வேளாண் அலுவலர்களுக்கும் தெரியாது. சிலர் பட்ட பகலில், லோடு வாகனங்களில் வந்து அலுவலக வளாகத்தில் குப்பை கொட்டி செல்கிறார்கள். இதை எல்லாம் யாரும் தடுப்பதில்லை. இதை மேம்படுத்த வேளாண் துறையினர் முன் வரவேண்டும்” என்றனர்.

One thought on “கோவையில் வீணாக கிடக்கிறது வேளாண் கட்டடங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *